‘திருட்டு ரயில்.’ கதை + லேட்டஸ்ட் ஆல்பம்!

‘திருட்டு ரயில்.’ கதை + லேட்டஸ்ட் ஆல்பம்!

SSS மூவிஸ் சார்பில் A.S.T.சலிம் மற்றும் அனு மூவிஸ் சார்பில் P.ரவிக்குமார் இணைந்து தயாரித்துள்ள படம் ‘திருட்டு ரயில்.’இதில் ரக்சன், சரண் செல்வம் ஆகிய இரண்டு ஹீரோக்கள் அறிமுகமாகிறார்கள். கேத்தி என்ற புதுமுகம் ஹீரோயின். மேலும் சென்றாயன், ரவிக்குமார், பிரசாந்த், பாலாஜி, ஷண்முகராஜன், இமான் அண்ணாச்சி, மயில்சாமி, பசங்க சிவக்குமார், பிளாக் பாண்டி, தீப்பெட்டி கணேசன் ஆகியோரும் நடித்துள்ளார்கள்.


படத்தின் கதை எழுதி இயக்கிய திருப்பதியிடம் பேசிய போது, “ஊரில் ஐந்து இளைஞர்களுக்கும், ஒரு போலீஸ் அதிகாரிக்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது. அதைச் சமாளிக்க முடியாமல் அந்த ஐந்து பேரும் ரயிலில் சென்னைக்குத் தப்பிச் செல்லும் சூழ்நிலைக்கு ஆளாகிறார்கள். சென்னையில் இறங்கிய பின் அதைவிட பெரிய பிரச்சனையொன்று அவர்களுக்காகக் காத்திருக்கிறது. அதிலிருந்து அவர்கள் மீண்டார்களா.. இல்லையா… என்பதுதான் கதை: என்றார்

error: Content is protected !!