“தாரை தப்பட்டை” பற்றி சசிகுமார் + வரலட்சுமி பேட்டி & மூவி ஸ்டில்ஸ் !

“தாரை தப்பட்டை”  பற்றி சசிகுமார் + வரலட்சுமி பேட்டி  &  மூவி ஸ்டில்ஸ் !

நேஷனல் அவார்ட் டைரக்டர் என்ற பேரெடுத்த பாலா இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் படம் “தாரை தப்பட்டை”.தமிழ் நாட்டுக் கலாச்சாரங்களில் ஒன்றான ‘கரகாட்டம்’ பற்றிய கதையை, அதன் மண் மணம் மாறாமல் பாலா படைத்திருகிறாராம்


படம் பற்றி படத்தின் நாயகன் சசிகுமார், ““இந்தப் படம் மொத்தமாவே பாலா சாரோட படம்தான், அதுல நாங்க நடிக்கிறோம், ரொம்ப சந்தோஷம். எனக்கு என்ன தனிப்பட்ட சந்தோஷம்னா, அவர் கூட ‘சேது’ படத்துல உதவி இயக்குனராக வேலை பார்த்துட்டு, இப்ப அவர் இயக்கத்துல நடிக்கிறது தனி சந்தோஷம். படத்துல நடிக்கிறதுக்கு நான் ஹீரோவாலாம் போகவேயில்லை, அவரோட சிஷ்யனாதான் போனேன், இந்தப் படத்துல மறுபடியும் நான் அவர் கிட்டடேயிருந்து நிறையே கத்துக்கிட்டேன்.

படத்துல என் கேரக்டர் பேரு சன்னாசி. நான் ‘தாரை தப்பட்டை’ங்கற குழுவ நடத்துறவன். நான் ‘கரகாட்டம்’லாம் ஆட மாட்டேன். ஆள் இல்லைன்னா, நாதஸ்வரம் வாசிக்கிறது, தவில் வாசிக்கிறது இப்படி எல்லாத்தையும் செய்யறவன்.பாலா சார் இந்தப் படத்துல நான் நடிக்கணும்னு விருப்பப்பட்டாரு. படம் ‘கரகாட்டம்’ சம்பந்தப்பட்ட கதை, அதனால பயிற்சி எடுத்துக்கணும்னு சொன்னாரு. நடனம் ஆடறது, நாதஸ்வரம் வாசிக்கிறது எல்லா எடுக்கணும்னு சொன்னாரு. அப்புறம் இரண்டு மாசம் அதுக்காக பயிற்சி எடுத்தேன்.

இதுக்கு முன்னாடி வந்த ‘கரகாட்டம்’ சம்பந்தமான படங்களுக்கும் இந்தப் படத்துக்கும் எந்த சம்பந்த மும் இல்லை, இது பாலா சார் பாணியில உருவாகியிருக்கிற படம். இளையராஜா சாரோட 1000மாவது படத்துல நடிக்கிறது பெருமையான விஷயம். இந்தப் படத்துக்காக அவர் காட்சிகளுக்கான இசையைப் பதிவு பண்ணி முன்னாடியே கொடுத்துடுவாரு. அதுக்கு ஏத்தபடி நாங்க ஃபீல் பண்ணி நடிச்சது புது அனுபவமா இருந்துச்சி.‘கரகாட்டம்’கறது ஒரு என்டர்டெயின்மென்ட், நம்மள என்டர்டெயின் பண்றவங்க. அவங்க வாழ்க்கையில நடக்கிற சந்தோஷம், துக்கம், காதல் அது எல்லாமும்தான் இந்தப் படத்துல இருக்கு,” என்கிறார் சசிகுமார்.


“பாலா படம் ஒன்றில் நடித்துவிட்டால் அதன் பிறகு எத்தகைய படத்திலும் எத்தகைய கேரக்டரிலும் நடித்து விடமுடியும் அந்த அளவிற்கு பயிற்சி கிடைத்து விடும், அவர் ஒரு பல்லைகழகம்” என்கிறார் வரலட்சுமி. தாரை தப்பட்டை படத்தில் நடித்தது பற்றி வரலட்சுமி மேலும், “திடீரென்று ஒரு நாள் பாலா சாரிடமிருந்து ஒரு போன் வந்தது. உடனே அபீசுக்கு வரச்சொன்னார். போனேன். படம் தாரை தப்பட்டை நீ கரகாட்டக்காரி வேடத்துல நடிக்கிற ஓகேவான்னு கேட்டார். கரும்பு திங்க கூலியான்னு உடனே ஒத்துக்கிட்டேன். ஏற்கெனவே எனக்கு நடனம் தெரியும் என்பதால் கரகாட்டத்தை எளிதாக கத்துக்க முடிந்தது. படப்பிடிப்புக்கு கரகாட்டம் ஆடும் பெண்களை வரவழைத்து அவர்களின் உடல் மொழி, பேச்சு வழக்கை கற்றுக் கொண்டு நடித்தேன்.

படத்தில் என் கேரக்டர் பெயர் சூறாவளி. சசிகுமார் குரூப்ல ஆடுற பொண்ணு. படம் முழுக்க துறு துறுன்னு வர்ற மாதரியான கேரக்டர். செம குத்தாட்டம் போட்டிருக்கேன். பிருந்தா மாஸ்டர், ராதிகா மாஸ்டர், பாபா மாஸ்டர் மூணு பேரும் சேர்ந்து கசக்கி பிழிஞ்சிட்டாங்க. பாலா சார் சீன் சொல்லும் போதே அந்த கேரக்டராவே மாற வச்சிடுவார். அப்புறம் நாம நடிக்க வேண்டியதே இல்லை. ஒரு முறை கண்ணாடியை உடைக்கிற சீன். கையில் காயம் படுமேன்னு கூட யோசிக்காக உடைச் சேன். கண்ணாடி தோள்ல பட்டு காயமாகிடுச்சு. ஆனாலும் சீன் பிரமாதமாக வந்தது. அந்த இடத்தியே எனக்கு தங்க சங்கிலி போட்டு பாராட்டினார் பாலா சார். அவர் ஒரு பல்கலை கழகம் அவர்கிட்ட படிச்சு பட்டம் வாங்கிட்டா எங்க வேணாலும் வேலை பார்க்கலாம்” என்கிறார் வரலட்சுமி.

error: Content is protected !!