தாய்பால் சோப்! – சீனாவில் அமோக விற்பனை!

தாய்பால் சோப்! – சீனாவில் அமோக விற்பனை!

கடந்த சில மாதங்களுக்கு முன்னால் தாய்பாலில் ஐஸ்கீரீம் செய்து விற்பனை செய்யும் பெண்ணைப் பற்றி ஒரு செய்தி வெளியான பரபரப்பே இன்னும் அடங்காத நிலையில் சீனாவில் ஒரு பெண்மணி தன் தாய்பாலைக் கொண்டு சோப் தயாரித்து அதையும் தோல் நோய்களுக்கு அருமருந்து என்று ஆன்லைனில் விளம்பரம் கொடுத்து பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.
breastmilk soap
சீனாவை சேர்ந்த 30 வயது பெண் ஒருவருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது. அவர் தன்னுடைய குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முயற்சி செய்தார். ஆனால் அவருடைய குழந்தை தாய்ப்பாலை குடிக்க மறுத்தது. வழக்கமான பெண்களை விட அவருக்கு அதிகளவு தாய்ப்பால் சுரந்ததால், அதை வீணாக்க விரும்பாத அந்த பெண், தாய்ப்பால் மூலம் சோப்பு தயாரிதார் அவரது புதிய முயற்சியால் பலன் கிடைத்தது.

தான் தயாரித்த சோப்பை விற்பனை செய்ய அவர் ஆன்லைனை உபயோகித்தார். சுத்தமான தாய்ப்பாலில் செய்த சோப்பு, தோல் சம்பந்தமான நோய்களை குணப்படுத்தும் என அவர் செய்த விளம்பரத்திற்கு நல்ல பயன் கிடைத்தது. 500 மில்லியன் பேர் உபயோகப்படுத்தும் அமேசான், ஆன் லைன் வியாபாரா இணையதளத்தில் அவர் செய்த விளம்பரத்தால் அதிக அளவிலான ஆர்டர்கள் அவருக்கு கிடைத்துள்ளது. அவர் தயாரிக்கும் சோப்பு முயல்,மீன், போன்ற அழகிய வடிவங்களில் இருந்ததால் சீனர்கள் இந்த சோப்பை வாங்குவதில் போட்டி போடுகின்றனராம்..

Related Posts

error: Content is protected !!