தாம்பத்திய உறவுக்கு கணவன் அல்லது மனைவி மறுத்தால் டைவோர்ஸ் -சுப்ரீம் கோர்ட் உறுதி

தாம்பத்திய உறவுக்கு கணவன் அல்லது மனைவி மறுத்தால் டைவோர்ஸ் -சுப்ரீம் கோர்ட் உறுதி

தாம்பத்திய உறவுக்கு கணவனோ அல்லது மனைவியோ உடன்பட மறுத்தால் அவர்கள் மணவிலக்கு (விவாகரத்து) செய்து கொள்ளலாம் என்ற சென்னை ஹைகோர்ட்டின் உத்தரவை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளது.மேலும் அது “கணவனோ அல்லது மனைவியோ, போதிய காரணம் இல்லாமல், ஒருவர் மற்றவருடன் நீண்ட காலமாக தாம்பத்திய உறவுக்கு உடன்பட மறுத்து வருவது மனரீதியாக கொடுமைப்படுத்தப்படுவதற்கு வழிவகுக்கும்.” என்றும் தெரிவித்துள்ளது
sc-decision-on-divorce
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணும், அவருடைய கணவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். அவருடைய கணவர், லண்டனில் வசித்து வருகிறார். அவர் மனைவி யிடம் மணவிலக்குக் கோரி, சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார். அதில், தாம்பத்திய உறவுக்கு உடன்பட மறுப்பது உள்ளிட்ட பல்வேறு வழிகளில், தன் மனைவி தன்னை மனரீதியாக கொடுமைப்படுத்தியதாக அவர் குற்றம் சாட்டி இருந்தார்.

அதற்கு அப்பெண் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், தனக்கு குழந்தை பெற விருப்பம் இல்லாத தால், தாம்பத்திய உறவுக்கு உடன்பட மறுத்ததாக கூறி இருந்தார்.ஆனால் அதை ஹைகோர்ட் ஏற்றுக்கொள்ளவில்லை. எத்தனையோ கருத்தடை முறைகள் உள்ளன. நீங்கள் விரும்பினால், அதை பயன்படுத்தி கரு உருவாதலை தடுத்து விடலாமே என்று கூறிய நீதிபதிகள் இருவருக்கும் மணவிலக்கு வழங்கி தீர்ப்பு அளித்தனர்.

இந்த தீர்ப்பை எதிர்த்து, அப்பெண் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அம்மனு, நீதிபதி எஸ்.ஜே. முகோபாத்யாயா தலைமையிலான அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டது. சென்னை ஹைகோர்ட் அளித்த தீர்ப்பை உறுதிப்படுத்திய நீதிபதிகள், பெண்ணின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.அப்போது “கண னோ அல்லது மனைவியோ, போதிய காரணம் இல்லாமல், ஒருவர் மற்றவருடன் நீண்ட காலமாக தாம்பத்திய உறவுக்கு உடன்பட மறுத்து வருவது மனரீதியாக கொடுமைப்படுத்தப்படுவதற்கு வழிவகுக்கும். இதன் அடிப்படையில், விவாகரத்து வழங்க முடியும்.

தாம்பத்திய உறவுக்கு உடன்பட மறுத்ததற்கு அந்த பெண் கூறிய காரணத்தை ஏற்க முடியாது. இருப்பினும், இந்த வழக்கின் சந்தர்ப்ப சூழ்நிலைகளையும், இருதரப்பின் பொருளாதார சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு, அந்த பெண் ணுக்கு அவருடைய கணவர் ஒரே முறை வாழ்வாதாரத் தொகையாக ரூ.40 லட்சம் வழங்குமாறு உத்தரவிடுகிறோம்” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

error: Content is protected !!