தமிழ் சினிமாவில் கங்ணம் டான்ஸ் ஆடும் பிராவோ! ஸ்பெஷல் ஆல்பம்

தமிழ் சினிமாவில் கங்ணம் டான்ஸ் ஆடும் பிராவோ! ஸ்பெஷல் ஆல்பம்

மேற்கத்திய தீவுகள் அணியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் பிராவோ. கிட்டத்தட்ட ஆல்ரவுண்டராக கலக்கிவரும் இவர் ஐ.பி.எல். போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகிறார். கேட்ச் பிடித்தாலோ, விக்கெட் எடுத்தாலோ மைதானத்தில் இவர் ஆடும் கங்ணம் டான்ஸுக்கு ரசிகர்கள் ஏராளாம்.

கிரிக்கெட்டில் ஜொலித்து வரும் பிராவோ தற்போது சினிமாவிலும் அதுவும் தமிழ் சினிமாவில் ஒரு படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். தமிழில் ராஜன் மாதவ் இயக்கும் ‘உலா’ என்ற படத்தில்தான் பிராவோ நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கிரிக்கெட் ஆட்டத்தின் இடையில் மைதானத்தில் இவரது டான்ஸை பார்த்த இயக்குனர் அது பிடித்துப்போய் இவருக்கு அந்த வாய்ப்பைக் கொடுத்துள்ளாராம். ராஜன் மாதவ் சேரன் நடிப்பில் வெளிவந்த ‘முரண்’ படத்தை இயக்கியவர் என்பது நினைவு கூற்த்தக்க்து.

error: Content is protected !!