தமிழ்நாட்டுக்கு 200 ரூபாய் நோட்டு இப்போதைக்கு வராதுங்கோ!

தமிழ்நாட்டுக்கு 200 ரூபாய் நோட்டு இப்போதைக்கு வராதுங்கோ!

நேற்று முதல் நாட்டின் முக்கிய நகரங்களில் இருநூறு ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வந்தன. இந்நிலையில், தமிழகத்தில் இந்த இருநூறு ரூபாய் நோட்டுகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம் என்று தகவல் வந்துள்ளது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் ரிசர்வ் வங்கி 500, 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில் நேற்று முதல் புதிய 200 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளது ரிசர்வ் வங்கி. இந்த 200 ரூபாய் நோட்டுகள் ஆரஞ்ச் மற்றும் மஞ்சள் நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டின் முன்பக்கதில் காந்தி உருவமும் பின்புறத்தில் சாஞ்சி ஸ்தூபி படமும் இடம்பெற்றுள்ளது. ரூபாய் நோட்டுகளின் பாதுகாப்பு கோடுகள் நீல நிறத்தில் உள்ளது. இந்த புதிய ரூபாய் நோட்டுகள் மும்பை, டெல்லி உள்ளிட்ட இடங்களில் நேற்றே புழக்கத்துக்கு வந்த நிலையில், இன்னும் தமிழகத்தில் புழக்கத்துக்கு வரவில்லை. மேலும், வரும் 28-ம் தேதி முதல் சென்னையின் வங்கிகளில் இந்த 200 ரூபாய் நோட்டுகள் கிடைக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ஆனாலும் தமிழகத்தில் ரூ.200 நோட்டு எப்போது புழக்கத்துக்கு வரும்? என்று ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள், “சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்துக்கு புதிய ரூ.200 நோட்டுகள் கன்டெய்னர்கள் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளது. தொடர் விடுமுறை காரணமாக வங்கிகளுக்கு பிரித்து கொடுக்க முடியவில்லை.வருகிற 28–ந்தேதி (திங்கட்கிழமை) முதல் அனைத்து வங்கிகளுக்கும் பிரித்து கொடுக்க இருக்கிறோம். பொதுமக்களுக்கு அவரவருடைய வங்கி கிளைகளில் பணம் எடுக்க செல்லும்போது வழங்கப்படும். வங்கி கணக்குகளில் இருந்து மட்டுமே பெற முடியும். தனியாக யாரும் சென்று வாங்க முடியாது.

மேலும், ஏ.டி.எம்.–ல் புதிய ரூ.200 நோட்டுகள் கிடைப்பதற்கு சற்று காலதாமதம் ஆகும். ஏனென்றால் ஏ.டி.எம். எந்திரத்தில் இதற்கென சில மாற்றங்களை செய்யவேண்டும். அந்த பணிகள் நிறைவடைந்த பிறகு, ஒவ்வொரு வங்கியின் ஏ.டி.எம்.களிலும் புதிய ரூ.200 நோட்டுகள் கிடைக்கும். தேவையை பொறுத்து மீண்டும் புதிய ரூ.200 நோட்டுகள் வரும் என்று நம்புகிறோம்”என்று தெரிவித்தனர்.

error: Content is protected !!