தமிழ்கத்தில் ஆம்னி பஸ் கட்டணம் நாளை முதல் உயர்வு:!

தமிழ்கத்தில் ஆம்னி பஸ் கட்டணம் நாளை முதல் உயர்வு:!

கோடை விடுமுறையை கழிப்பதற்காக தென் மாவட்டங்களுக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. இதை பயன்படுத்தி நாளை முதல் ஆம்னி பஸ்களின் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஆம்னி பஸ்கள் நாளை முதல் ரூ.20 லிருந்து 50 வரை கட்டணம் உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளனர். சென்னையில் இருந்து மதுரை செல்லும் சாய்வு வசதி கொண்ட பஸ் கட்டணம் ரூ.580லிருந்து ரூ.600 ஆக உயர்கிறது. வால்வோ பஸ்சுக்கு ரூ.770லிருந்து 800 ஆக உயர்கிறது. படுக்கை வசதி கொண்ட பஸ் ரூ.810லிருந்து 860 ஆக உயர்கிறது என்று சில பஸ் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
omni bus fare hike
மிழ்நாடு ஆம்னி பஸ்கள் சங்கத்தில் 700 பஸ்களும், அனைத்து இந்திய ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தில் 700 பஸ்கள் என மொத்தம் 1400 பஸ்கள் மாநிலம் முழுவதும் இயங்கி வருகின்றன. தரத்துக்கு ஏற்றவாறு அந்தந்த பஸ்களுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வசூல் செய்யப்படுகிறது. டீலக்ஸ், வால்வோ, குஷன் என தனித்தனியாக இருப்பதால் ஒவ்வொரு பஸ்சுக்கும் வெவ்வேறு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

தற்போது கோடை காலம் என்பதால், அனைத்து ஆம்னி பஸ்களிலும் கூட்டம் நிரம்பி வழிகின்றன. குறிப்பாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் கூட்டம் அலை மோதுகிறது. சீசன் என்பதால் கட்டணத்தை உயர்த்தவும் பஸ் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.இது தொடர்பாக அனைத்து இந்திய ஆம்னி பஸ் உரிமையாளர் சங்க செயலாளர் அன்பு கூறியதாவது: எங்கள் சங்கத்தில் 700 பஸ்கள் இயங்கி வருகின்றன. நாங்கள் ஏற்கனவே ஒரு கிலோ மீட்டருக்கான கட்டணத்தை, அனைத்து பஸ் உரிமையாளர்களுக்கு தெரிவித்துள்ளோம். அதன்படிதான் வசூலிக்க வேண்டும். யாரும் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது’’ என்றார். ஒரு சில ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கட்டணம் உயர்த்தப்படும் என தெரிவித்துள்ள நிலையில், ஆம்னி பஸ் சங்கம் கட்டணம் உயர்த்தக்கூடாது என தெரிவித்துள்ளது பயணிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!