தமிழின அழிப்பாளர்களின் பட்டியல் !–நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வெளியிட்டது

தமிழின அழிப்பாளர்களின் பட்டியல் !–நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வெளியிட்டது

புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுக்கு எதிராக சிறிலங்கா அரசு வெளியிட்டிருந்த பட்டியலுக்கு பதிலடியாக, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதற்பெயர் பட்டியல் வெளி வந்துள்ளது.தமிழீழத் தேசிய துக்க நாளான மே18ல் வெளிவந்துள்ள இப்பட்டியலில், இனப்படுகொலையாளர்கள் 12 பேருடைய விபரங்கள் முதல்தொகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. நம்பகமான ஆதரங்களுடனும், அனைத்துலக சட்டங்களுக்கு ஏற்பவும் இந்த 12 நபர்களுடைய குற்றங்கள் பட்டியலிடப்பட்டுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.அத்துடன் வெளிவந்துள்ள இப்பட்டியல் உரியமுறையில் அனைத்துலக நாடுகளதும், அனைத்துலக அமைப்புக்களுக்கும் கவனத்துக்கும் கொண்டு செல்லப்படவுள்ளது.
sl_war_criminals_001
கட்ந்த 18ம் தேதி வெளியான இந்த முதல் பட்டியலில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்திருப்பவர் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேதான். இவர் இலங்கையின் அதிபர் என்றும் ஒரு போதும் முடியாதவாறு தன் பதவிக் காலத்தை நீட்டித்துக் கொண்டே இருக்குமாறு சட்டத்தை மாற்றிக் கொண்டவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.இரண்டாம் இடத்தை தற்போதும் தீவிர அரசியலில் குதிக்க முயலும் முன்னாள் ஜனாதிபதி சந்திரகா குமாரதுங்காவின் பெயர் இடம்பிடித்துள்ளது.கோத்தா என்றழைக்கப்படும் கோத்தபாய ராஜபக்சேதான், இந்த இனவழிப்பின் முக்கிய மூளையாக இருந்து செயல்பட்டவர். அவர்தான் இந்தப் பட்டியலில் மூன்றாவது குற்றவாளியாகியுளார்.கடைசி யுத்தத்தில் படைகளை நடத்திய தளபதி சரத் பொன்சேகாவை, இனப்படுகொலையாளர்களில் நான்காவதாக பட்டியலிட்டுள்ளனர்.

இந்த தமிழின அழிப்பாளர்களது பெயர்ப்பட்டியல் தொடர்ந்தும் உரிய ஆவணமாக வெளியிடப்படும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளதோடு, பெயர்ப்பட்டியலில் உள்ளவர்கள் மீது அனைத்துலக அளவிலான பயணத்தடை, சொத்துமுடக்கம் உட்பட அனைத்துலக குற்றவியில் நீதிமன்றங்களில் இவர்களை நிறுத்துவதற்கான செயல்முனைப்புக் குறித்தும் கவனம் செலுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை ஐ.நாவின் பிரதிநிதி பாலித கோகணவின் பெயரும் உள்ளடக்கப்பட்டிருப்பதோடு, ஜப்பான், பிரேசில், ரஷ்யா போன்ற நாடுகளுக்கான சிறிலங்காத் தூதுவர்களாக உள்ளவர்களும் இப்பட்டியலில் உள்ளக்கப்பட்டுள்ளமை சிறிலங்காவுக்கு மற்றுமொரு நெருக்கடியினை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் அறிய””http://www.scribd.com/doc/224838453/DIRTY-DOZEN-Genocidaires-and-War-Criminals-on-Tamils-in-Sri-Lanka

Related Posts

error: Content is protected !!