தமிழக சட்டமன்றமும்… மீடியாமன்றமும்..!-ஸ்பாட் ரிப்போர்ட்

தமிழக சட்டமன்றமும்… மீடியாமன்றமும்..!-ஸ்பாட் ரிப்போர்ட்

தமிழகசட்டசபையின்கூட்டத்தொடர்தொடங்கியபிறகுதொடர்ந்தார் போல 3 நாட்கள்விடுமுறைக்கு பிறகு நேற்றுகாலை 10 மணிக்குமீண்டும்சட்டசபைகூடியது. சட்டமன்றத்திற்குள் கேள்வி நேரம் நடந்து கொண்டிருந்தது. ..கேள்வி நேரம் தொடங்கி ஒரு மணிநேரம் ஆகும் போது மீடியாமன்றம் அருகே நின்ற போலீசார் பரபரப்பானார் கள்… சட்டசபையில் உள்ள சாலையில் போலீசார் கயிறு கட்டி வரிசையில் நின்று அலார்ட் ஆக…முதல்வர் ஜெ., வருகை உறுதியானது… அப்படி போலீசார் அலார்ட் ஆன சில நிமிடங்களில் முதல்வரின் கான்வாய் வாகன அணிவகுப்பு சட்டமன்றத்திற்கு நுழைந்தது…காரில் இருந்த இறங்கிய முதல்வரை அமைச்சர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்கள்…கேள்வி நேரம் முடியும் நேரம் முதல்வர் ஜெ., அவைக்குள் நுழைந்தார்….


வழக்கம் போல கேள்வி நேரம் முடிந்ததும் 110விதியின் கீழ் முதல்வர் சில அறிவிப்புகளை வெளியிடுவார் என சபாநாயகர் அறிவித்ததும்…திமுக உறுப்பினர்கள் எழுந்து பேச முயன்றனர்… அதற்கு சபாநாயகர் அனுமதி மறுக்க… தொடர்ந்து அவர்கள் நின்ற படி பேச… அனுமதி கிடைக்கவில்லை… முதல்வர் எழுந்து 110விதியின் கீழ் அறிவிப்பு செய்யத் தொடங்கினார்… அதில் ‘‘தமிழகம் முழுவதும் ஏற்கனவே உள்ள தாலுகா அலுவலகங்களோடு சேர்ந்து நிர்வாக வசதிக்காக புதிய 16 தாலுகாவட்டங்கள் 16 கோடி செலவில் தொடங்கப்படும் என்றும், 5 வருவாய் கோட்டங்களும் தொடங்கப்படும் என்றும், தொழில் துறையை மேம்படுத்தும் விதமாக கிண்டியில் 100 கோடி செலவில் புதிய அடுக்குமாடி தொழில் வளாகம் அமைக்கப்படும்’’என அறிவித்தார்.

முதல்வர் அறிவிப்பு செய்து முடித்ததும் வழக்கம் போல முதல்வரின் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து அரசுக்கு ஆதரவான சட்டமன்ற உறுப்பினர்கள் செ.கு.தமிழரசன், கதிரவன் உட்பட சிலர் வாழ்த்துரை வழங்க…
அந்த வாழ்த்துரையின் போதே அவையில் இருந்து முதல்வர் ஜெ., புறப்பட்டார்.

சட்டசபையில் அதிமுக உறுப்பினர் கனிதாசம்பத் பேசும்போது, 2ஜி விவகாரம் குறித்து திமுகவை விமர்சித்து சில கருத்துக்களை கூறினார். இதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து எழுந்து பேச… அவர்களை சபாநாயகர் அமைதிபடுத்த முயன்றார்… இருந்த போதும் அதிமுக உறுப்பினர் கனிதாசம்பத் பேசிய கருத்துக்களை நீக்கவேண்டும்… என திமு கஉறுப்பினர்கள் கூச்சல் போட… வழக்கம் போல திமுக உறுப்பினர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை… அப்புறம் என்ன அவர்கள் வழக்கம் போல வெளிநடப்பு செய்வதாக கூறி சபையில் இருந்து வெளியேறினார்கள்…சட்டமன்றத்திற்குள் திமுக வெளிநடப்பு செய்தது என்றதும்… சபைக்கு வெளியே இருந்த மீடியா மன்றம் பரபரப்பானது…திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததும் வழக்கம் போல மீடியாமன்றத்திற்கு வந்து எதற்காக வெளிநடப்பு செய்தோம் என்பதை சொல்வார்கள் எனஆர்வமாக கேமராக்களையும், வீடியோ கேமராக்களையும் தயார் நிலையில் வைத்து வாசலையே பார்த்திருந்தார்கள்…மணித்துளிகள் ஓடியதே தவிர வெளிநடப்பு செய்த திமுக உறுப்பினர்கள் யாரும் மீடியா மன்றம் வரவேயில்லை…அவர்கள் அப்படியே அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட அறைக்குள் சென்று விட்டார்கள்…மீடியா மன்றம் பரபரப்பு அடங்கி அமைதியானது…

சட்டமன்றத்திற்குள் அமைச்சர் வளர்மதி பேச எழுந்த போது காங்கிரஸ் உறுப்பினர் விஜயதாரணி எழுந்து பேசமுயல… அவருக்கு சபாநாயகர் அனுமதி மறுத்தார்… இருந்தும் உறுப்பினர் விஜயதாரணி எழுந்து மைக் இல்லாமலேயே பேச முயல… அமைச்சர் வளர்மதி எழுந்து உறுப்பினர் விஜயதாரணி குறித்து சில கருத்துக்களை கூற… வெளியே மீடியா மன்றம் பரபரப்பானது… அமைச்சர் வளர்மதியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உறுப்பினர் விஜயதாரணி வெளிநடப்பு செய்கிறார் என்று தகவல் வர… மீடியாமன்றம் அலார்ட் ஆனது…ஆனால், அப்படி ஒரு வெளிநடப்பு எதையும் உறுப்பினர் விஜயதாரணி நடத்தவில்லை…

சட்டமன்றத்திற்குள்… அதிமுக உறுப்பினர் 2ஜி குறித்து பேசிய சில கருத்துக்களை அவைகுறிப்பில் இருந்து நீக்கி சபாநாயகர் உத்தரவிட்டார். அதோடு, ‘‘நான் இந்த நடவடிக்கை எடுப்பதற்குள் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தது வேதனை அளிக்கிறது’’என்றார். திமுக உறுப்பினர்கள் கோரிக்கையை ஏற்று அதிமுக உறுப்பினர் பேசிய வார்த்தைகளை சபாநாயகர் நீக்கி உத்தரவிட்ட நேரம் திமுக உறுப்பினர்கள் தங்களுடைய அறையில் அமர்ந்திருந்தார்கள்…

சட்டமன்றத்திலும்… மீடியாமன்றத்திலும் எந்த பரபரப்புகளும் இல்லாமல் அமைதியாக இருந்த நேரம்…
சட்டமன்றத்தின் எதிரே சாலை திடீரென பரபரப்பானது… போலீசார்ஓட… அவர்களை பார்த்ததும் மீடியா மன்றத்தினர் கேமராக்களை கையில் எடுத்தபடி வாசலுக்கு ஓடினார்கள்…அங்கே சாலையில் அதிமுகவை சேர்ந்தவர் ‘பொய் குற்றச்சாட்டில் தன்னை கைது செய்தது தவறு, நீதி விசாரணை வேண்டும்’என குடும்பத்தோடு தீக்குளிக்க முயல… பரபரப்புஏற்பட்டது… தீக்குளிக்க முயன்றவரை குண்டுகட்டாக பிடித்த போலீசார் ஒரு ஆட்டோவை மடக்கி அதில் ஏற்றி அங்கிருந்து கொண்டு சென்றனர்…அடுத்த ஒரு ஆட்டோவை மடக்கிய போலீசார்… தீக்குளிக்க முயன்றவரின் மனைவி குழந்தையை ஏற்றிக் கொண்டு அங்கிருந்த அவசர அவசரமாக சென்றார்கள்…


இந்த பரபரப்புகள் முடிந்த கொஞ்ச நேரத்தில் திமுக உறுப்பினர்கள் துரைமுருகன்… அன்பழகன்… கம்பம் ராமகிருஷ்ணன் எனஒவ்வொருவராக தனித்தனியாக வெளியே வந்து மீடியாமன்றம் பக்கம் கூட திரும்பாமல் வெளியேறி தயாராக இருந்த காரில் ஏறிசென்றுவிட்டார்கள்…

மானிய கோக்கையின் போது தனது பதில் உரையை தொடங்கிய அமைச்சர் வளர்மதி…‘‘இங்கு சிலர் மனசாட்சி பற்றி பேசுகிறார்கள்… அப்படி மனசாட்சி பற்றி நினைத்தால் திருட்டு ரயில் ஏறியது நினைவுக்கு வரும்… அண்ணாநகர் ரமேஷ் குடும்பத்தோடு தற்கொலை செய்த போது மனசாட்சி பேசவில்லையா… சாதிக்க வேண்டிய வயதில் சாதிக்கை தற்கொலைக்கு தள்ளப்பட்டது குறித்து மனசாட்சி பேசாதா…’’ என பேச அவையில் அதிமுக உறுப்பினர்கள் மேஜையை தட்ட… அந்த சத்தத்திற்கு இடையே அமைச்சர் வளர்மதி தொடர்ந்து பேச…‘‘டிக்கெட் இல்லாமல் போனால் மெட்ரோ ரயில் கதவுகள் திறக்காதாம்… இந்தவசதி 70 ஆண்டுக்கு முன்னால் வந்திருந்தால் திருட்டு ரயிலில் சிலர் சென்னைக்கு வந்திருக்கவே முடியாது’’என பேச மீண்டும் அவையில் அதிமுக உறுப்பினர்கள் மேஜையை தட்டி ஆரவாரம்செய்தார்கள்…அமைச்சர் வளர்மதியின் இந்த பேச்சின் போது திமுக உறுப்பினர்கள்யாரும்அவையில்இல்லை…

மீடியாமன்றத்தில் நேற்றைய தினம் பரபரப்பு பேட்டிகள் எதுவும் இல்லாமல் அமைதியே நிலவியது… வெளி நடப்பு… வெளிநடப்பு… என கேமராக்களை அலார்ட் ஆக வைப்பதும்… அப்படி எந்த வெளிநடப்பும் நடக்காமல் வெளிநடப்பு செய்ததாக சொன்னவர்கள் மீடியாமன்றம் பக்கம்கூட திரும்பாமல் தனித் தனியாக வெளியேறி காருக்கு சென்றதாலும் இன்றைய மீடியாமன்றம் பரபரப்புகள் இல்லாமல் காணப்பட்டது…திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததும் மீடியாமன்றம் வந்து பேட்டி அளிப்பது வழக்கம்… இன்றைக்கு வெளிநடப்பு செய்தும் மீடியாமன்றம் பக்கம் கூட திமுக உறுப்பினர்கள் திரும்பாமல் போனதற்கு காரணம்… இன்றைய கூட்டத்தில் திமுக சட்டசபை தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளாததுதான் காரணம் போல…

முக்கிய எதிர்க்கட்சியே பரபரப்பு இல்லாமல் காணப்பட்டபோது… மற்ற எதிர்க்கட்சிகள் நடவடிக்கையை சொல்ல வேண்டுமா…???மொத்தத்தில் சட்டமன்றத்திலும் சரி… மீடியாமன்றத்திலும் சரி…நேற்று உப்புமில்லை.. சப்புமில்லை!

கோடங்கி

error: Content is protected !!