தமிழக சட்டசபை 4-ந் தேதி கூடுகிறது: அதிகாரபூர்வ அறிவிப்பு!

தமிழக சட்டசபை 4-ந் தேதி கூடுகிறது: அதிகாரபூர்வ அறிவிப்பு!

ஒவ்வொரு ஆண்டும் குளிர்கால கூட்டத் தொடர் என்ற பெயரில் அக்டோபர் இறுதியிலோ அல்லது நவம்பர் மாத தொடக்கத்திலோ சட்டசபை கூட்டப்படுவது வழக்கமாக உள்ளது. பொதுவாக ஒரு வாரம் இந்தக் கூட்டத் தொடர் நடைபெறும்.
கடந்த 2012-ம் ஆண்டில் ஐந்து நாட்களும், 2013-ம் ஆண்டில் 6 நாட்களும் குளிர்காலக் கூட்டத் தொடர் நடைபெற்றது.
இதனிடையே தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் பச்சிளம் குழந்தைகள் இறந்தது உள்பட பல்வேறு பிரச்சினைகள் பற்றி விவாதிக்க சட்டசபையை கூட்ட வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி வந்தனர்.இவர்களுக்கு அறிக்கை மூலம் இரண்டு முறை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்தார். சட்டசபை கூட்டுவது எப்போது என்பது எங்களுக்குத் தெரியும், மற்றவர்களின் அறிவுரை எங்களுக்குத் தேவையில்லை என்று அவர் கூறியிருந்தார்.இந்தநிலையில் தமிழக சட்டசபை டிசம்பர் 4-ந் தேதி கூட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
tn assembly
இதுதொடர்பாக தமிழக சட்டசபையின் செயலாளர் ஏ.எம்.பி.ஜமாலுதீன் நேற்று வெளியிட்ட அறிக்கையில்,”தமிழக சட்டசபையின் கூட்டத்தை டிசம்பர் 4-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 174 (1)ன் பிரிவின்படி கவர்னர் கூட்டியுள்ளார். தலைமைச் செயலகத்திலுள்ள சட்டசபை மண்டபத்தில் இந்தக் கூட்டம் நடைபெறும்.”ர்ன்று அதில் கூறப்பட்டுள்ளது.

குளிர்கால கூட்டத் தொடர் என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் இறுதியிலோ அல்லது நவம்பர் மாத தொடக்கத்திலோ சட்டசபை கூட்டப்படுவது வழக்கமாக உள்ளது. பொதுவாக ஒரு வாரம் இந்தக் கூட்டத் தொடர் நடைபெறும்.
கடந்த 2012-ம் ஆண்டில் ஐந்து நாட்களும், 2013-ம் ஆண்டில் 6 நாட்களும் குளிர்காலக் கூட்டத் தொடர் நடைபெற்றது.
மேலும் முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா தற்போது தகுதி இழப்பு செய்யப்பட்டுள்ள நிலையில் கூடும் முதல் கூட்டம் இதுதான். எனவே இந்தக் கூட்டத் தொடரில் மற்ற எதிர்க்கட்சிகளின் போக்கு வலிமையாக இருக்கும்.

அதோடு, பல குற்றச்சாட்டுகள் ஏற்கனவே அரசின் மீது வைக்கப்பட்டுள்ளன. பருப்பு, முட்டை கொள்முதலில் முறைகேடு, சட்டம் ஒழுங்கு பிரச்சினை, தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் குழந்தைகள் இறப்பு, முல்லைப் பெரியாறு அணை நீர்மட்ட விவகாரம், காவிரியின் குறுக்கே கர்நாடகம் 2 அணைகள் கட்டுவதான அறிவிப்பு, யூரியா உரம் தட்டுப்பாடு போன்ற பல முக்கிய பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் கொண்டு வர வாய்ப்புள்ளது.இந்தக் எத்தனை நாட்கள் நடைபெறும்? அப்போது கொண்டு வரப்படும் தீர்மானங்கள் என்ன? என்பதும், 4-ந் தேதி நடைபெறவுள்ள அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது.

error: Content is protected !!