தமிழகத்தில் 12 சதவீதம் வேட்பாளர்கள் கிரிமினல்கள்! –

தமிழகத்தில் 12 சதவீதம் வேட்பாளர்கள் கிரிமினல்கள்! –

தமிழ்நாட்டில் போட்டியிடும் மொத்தமுள்ள 844 வேட்பாளர்களில் 103 வேட்பாளர்கள் அதாவது 12 சதவீதம் பேர் கிரிமினல் வழக்குகள் கொண்டவர்கள்……ஜனநாயக மறுசீரமைப்புக்கான அமைப்பு (Association for Democratic Reforms – ADR) ஆய்வறிக்கை – பகுதி 1. இந்த ஆய்வு பற்றிய ஒரு பார்வை : ஜனநாயக மறுசீரமைப்புக்கான அமைப்பு ADR தமிழ்நாட்டில் போட்டியிடும் 845 வேட்பாளர்களில் 844 பேரின் விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் உள்ள விவரங்களின் அடிப்படையில் ஆய்வு செய்தது. இதில் எம்.ஜேசுராஜ் என்ற நெல்லை தொகுதி ஆம் ஆத்மி வேட்பாளரைப் பற்றி மட்டும் ஆய்வு செய்ய இயலவில்லை காரணம் இந்த அறிக்கை தயாராகும்வரை அவரைப்பற்றிய விவரங்கள் அடங்கிய ஆவணங்கள் இணைக்கப்படவில்லை என்று ADR குறிப்பிட்டுள்ளது.
criminal-politics
2014 மக்களவைத் தேர்தல் அறிக்கையின் தொகுப்பு

குற்றப்பின்னணிக்கான காரணிகள் /

1. அதிக பட்சம் ஐந்து ஆண்டுகள் வரை தண்டணை பெறக்கூடிய வகையிலான குற்றங்கள் புரிந்தவர்கள்.

2. பிணையில் வரமுடியாத வழக்கில் தொடர்புடையவர்கள்

3. ஐ.பி.சி 171E அல்லது லஞ்சம் தொடர்பான தேர்தல் குற்றங்களில் தொடர்புடையவர்கள்

4. அரசுக்கு இழப்பு ஏற்படுத்திய குற்றம் செய்தவர்கள்

5. தாக்குதல் நடத்தியது, கொலை, கடத்தல், பாலியல் வன்முறையில் ஈடுபட்டது போன்ற குற்றங்களில் ஈடுபட்டவர்கள்.

6. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 8 ல் குறிப்பிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள்

7. ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் குற்றமிழைத்தவர்கள்

8. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டவர்கள்.

இவ்வாறு பார்க்கப்போனால் பட்டியலில் வருபவர்களின் விவரங்கள் இதோ….

கிரிமினல் வழக்குகள் கொண்ட வேட்பாளர்கள்

மொத்தமுள்ள 844 வேட்பாளர்களில் 103 வேட்பாளர்கள் அதாவது 12 சதவீதம் பேர் கிரிமினல் வழக்குகள் கொண்டவர்கள். கடந்த 2009 தேர்தலை ஒப்பிடும்போது அப்போது 63 பேர் அதவாது 8 சதவீதம் பேர் குற்றப்புகார் பின்னணி கொண்டவர்களாக இருந்தனர். அதில் 31 பேர் மிகவும் கடுமையான குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள்.

கடுமையான குற்றங்களில் ஈடுபட்டவர்கள்

53 வேட்பாளர்கள் அதாவது 6 சதவீத வேட்பாளர்கள் கொலை, கொலைமுயற்சி, கடத்தல் உள்ளிட்ட கடுமையான குற்றங்களில் தொடர்புடையவர்கள்.

கட்சிரீதியாக குற்ற வழக்கு கொண்ட வேட்பாளர்கள்

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் 39 வேட்பாளர்களில் 23 சதவீதம் பேர் அதாவது 9 பேர் குற்ற வழக்குகள் கொண்டவர்கள்.

அதிமுக சார்பில் போட்டியிடும 39 வேட்பாளர்களில் 18 சதவீ தம் அதாவது 6 பேர் குற்ற வழக்குகள் கொண்டவர்கள்.

திமுக சார்பில் போட்டியிடும் 34 வேட்பாளர்களில் 17 சதவீதம் பேர் அதாவது 4 பேர் குற்ற வழக்குகள் கொண்டவர்கள்.

ஆம் ஆத்மி சார்பில் போட்டியிடும் 23 வேட்பாளர்களில் 36 சதவீதம் பேர் அதாவது 4 பேர் குற்ற வழக்குகள் கொண்டவர்கள்.

தேமுதிக சார்பில் போட்டியிடும் 14 வேட்பாளர்களும் தங்களுக்கு எதிராக உள்ள கிரிமினல் வழக்குகள் பற்றிய விவரங்களை வேட்பு மனுவிலேயே குறிப்பிட்டுள்ளனர்.

கட்சிரீதியான கடுமையான குற்ற வழக்குகள் கொண்டவர்கள்

இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 39 வேட்பாளர்களில் 10 சதவீதம் பேர் அதாவது 4 பேர் மீது கடுமையான குற்ற வழக்குகள் உள்ளன.

பாஜக சார்பில் போட்டியிடும் 9 வேட்பாளர்களில் 11 சதவீதம் பேர் அதவாது ஒருவர் மீது கடுமையான குற்ற வழக்கு உள்ளது.

அதிமுக சார்பில் போட்டியிடும் 39 வேட்பாளர்களில் 15 சதவீதம் பேர் அதாவது 5 பேர் மீது கடுமையான குற்ற வழக்குகள் உள்ளன.

திமுக சார்பில் போட்டியிடும் 34 வேட்பாளர்களில் 13 சதவீதம் பேர் அதாவது 3 பேர் கடுமையான குற்ற வழக்குகள் கொண்டவர்கள்.

ஆம் ஆத்மி சார்பில் போட்டியிடும் 23 பேரில் 21 சதவீதம் பேர் அதாவது 3 பேர் மீது கடுமையான குற்ற வழக்குகள் உள்ளன.

தேமுதிக சார்பில் போட்டியிடும் 14 வேட்பாளர்களும் தங்களது குற்ற வழக்குகள் தொடர்பான தகவலை வேட்பு மனு படிவத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

கொலை வழக்கில் தொடர்புடைய வேட்பாளர்கள்

தென்காசி தொகுதி மதிமுக வேட்பாளர் டாக்டர் சதன் திருமலைக்குமார் மற்றும் அதே தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீது கொலை வழக்கு உள்ளது. (இந்தியத் தண்டனைச் சட்டம் 302 ன் படி).

-TNTV-SBNN செய்திச் சேவை

error: Content is protected !!