தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு!

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு!

கோடைக்காலம் தொடங்கவுள்ள நிலையில், தமிழகத்தில் மீண்டும் மின்வெட்டு அமலுக்கு வந்துள்ளது. சென்னை புறநகர்ப் பகுதிகள் மற்றும் மாவட்ட நகரப் பகுதிகளில் ஒரு மணி நேரமும், கிராமங்களில் 2 மணி நேரம் வரையிலும் மின் வெட்டு அமலுக்கு வந்துள்ளது. மின் வெட்டு நேரம் படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
power-cut-in-tamilnadu slogam
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக கடுமையான மின் வெட்டு அமல்படுத்தப்பட்டு வந்தது. சில மாதங்களுக்கு முன்பு வரை, இந்த நிலை நீடித்தது. சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் 8 முதல் 16 மணி நேரம் வரைகூட மின்வெட்டு அமலில் இருந்தது. மின்வெட்டுப் பிரச்சினைக்கு தீர்வு காண முதல்வர் ஆலோசனை நடத்தியதாக செய்திகள் ம்ட்டும் வந்தன.

இதற்கிடையில் பனிக்காலம் முடிந்து கோடைக் காலம் தொடங்க உள்ளது. குளிர் குறைந்து, வெப்பம் அதிகரிப்ப தால் மின்சாரத் தேவையும் அதிகமாகிறது. காற்றாலை மின் உற்பத்தியும் குறையத் தொடங்கியுள்ளது. வழக்கமாக அக்டோ பருடன் காற்றாலை சீசன் முடிந்து மீண்டும் ஏப்ரல் இறுதி அல்லது மே முதல் வாரத்தில் தொடங்கும். இடைப்பட்ட காலத்தில் மிகக் குறைந்த அளவிலேயே காற்றாலை மின் உற்பத்தி இருக்கும்.

அதே சம்யம் இந்த ஆண்டு சீசனுக்குப் பிறகும் காற்றாலை மின் உற்பத்தி குறையாமல் இருந்தது. சில நாட்களுக்கு முன்பு வரை காற்றாலைகள் மூலம், 850 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தியானது. மேலும் புதிய மின் நிலையங்களில் சோதனை ஓட்டம் மூலம் அதிக அளவு மின்சாரம் கிடைத்தது. இதனால் மின்வெட்டு இல்லாமல் இதுவரை சமாளிக்கப்பட்டது. இதற்கிடையில் வெயில் காலம் தொடங்குவதால் மின்சாரத் தேவை அதிகரிக்கும். ஆனால் காற்றாலை மின் உற்பத்தியும் குறைந்து விடும். எனவே, மின் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது”.என்று தெரிவிக்கிறார்கள்

error: Content is protected !!