தண்ணித் தொட்டி தேடி வந்த கண்ணுக்குட்டிகள் – கர்நாடகா களேபரம் – வீடியோ!

தண்ணித் தொட்டி தேடி வந்த கண்ணுக்குட்டிகள் – கர்நாடகா களேபரம் – வீடியோ!

கொரோனாவின் தாக்கம் இன்னும் அதிகரித்துக் கொண்டே போவதை அடுத்து இந்தியா வெங்கும் மேலும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் சரிந்து கொண்டே போகும்பொருளாதாரத்தை உயர்த்தும் முயற்சியில் கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் லாக்டவுனை தளர்வுப்படுத்த மத்திய அரசு விதிமுறைகளை வகுத்தது.அதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளையும் மோடி அரசு வெளியிட்டது. இதில் சிவப்பு மண்டலத்தில் தடை செய்யப் பட்ட பகுதிகளை தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் மதுக்கடைகளை திறக்க அனுமதி வழங்கியது. இதன்படி, மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, கோவாவில் இன்று முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என அம்மாநில அரசுகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தன.

கர்நாடகா கலால் துறை அமைச்சர் எச்.நாகேஷ் கூறுகையில், ‘‘மாநிலம் முழுவதும் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், மால்களில் இல்லாத தனி கடைகளாக இருக்கும் மதுக்கடைகளை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. பப், பார் மற்றும் ரெஸ்டாரன்ட்டுகள் மதுவை விற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்’’ என்றார்.

அறிவித்தபடி இன்று முதல் மதுபான கடைகளைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் குடிமகன்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து காலை ஏழு மணி முதலே மதுபானக் கடைகள் இருக்கும் பகுதிகளில் குடிமக்கள் கூட்டம் அலைமோதியது. மதுக் கடைகளில் 5 பேருக்கு மேல் கூட கூடாது என்ற விதிகள் உள்ள போதிலும் ஒரு கி.மீ, தூரத்திற்கும் மேல் வரிசையில் நின்றனர். சில கடைகளில் 2 மணி நேரத்தில் அனைத்து சரக்குகளும் விற்றுத்தீர்ந்தன. போதிய அளவு இருப்பு இல்லாததால் கடைகளும் மூடப்பட்டன.

தமிழக- கர்நாடக எல்லையில் ஆனேக்கால் பகுதியில் ஏராளமானோர் குவிந்தனர். அவர்களை போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர்.

 

Related Posts

error: Content is protected !!