தங்கம் வாங்குவதில் பின்தங்கும் இந்தியர்கள்!

தங்கம் வாங்குவதில் பின்தங்கும் இந்தியர்கள்!

இதுவரை உலகத்திலேயே தங்கம் வாங்குவதில் இந்தியர்கள்தான் அதிக அளவில் ஆர்வம் காட்டுவதோடு அதில் முன்னிலை வகித்து வந்தனர்.ஆனால் இவ்வாண்டின் மூன்றாவது காலாண்டில், இந்தியாவுக்குப் பதிலாக, சீனா உலகின் மிக பெரிய தங்க நுகர்வு நாடாக மாறியுள்ளது என்று உலக தங்கச் சங்கம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது. இதன்படி இவ்வாண்டின் மூன்றாவது காலாண்டு, சீனாவின் தங்க அலங்கார பொருள் தேவையின் அளவு சுமார் 30 விழுக்காடு அதிகரித்து, 163.7 டன்னை எட்டியது. இந்தியாவின் தங்க அலங்கார பொருள் தேவையின் அளவு, 104.7 டன்னாகும். இதனால், உலகளவில், மிக பெரிய தங்க அலங்காரச் சந்தையாக சீனா மாறியுள்ளது. என்று குறிப்பிடுகின்றது.
nov 15 - china gold
நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் வரையான காலத்தில் இந்தியாவின் தங்கம் இறக்குமதி 162 டன்னாகும். ஏப்ரல் மாதத்தில் 118 டன்னும், மே மாதத்தில் 162 டன்னும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. ஜூன் மாதத்தில் 31 டன்னும், ஜூலையில் 41 டன்னும் இறக்குமதியாகியுள்ளன.

ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்க ளில் முற்றிலுமாக தங்கம் இறக்குமதி செய்யப்படவில்லை. நாட்டின் தங்க நுகர்வு ஆண்டுக்கு 900 டன்னாகும். இதில் 600 டன் நகை உற்பத்திக்கும் 300 டன் முதலீட்டிற்கும் செல்கிறது.கடந்த ஜூலை 22-ம் தேதி ரிசர்வ் வங்கி பிறப்பித்த கடுமையான உத்தரவை பிறப்பித்ததைத் தொடர்ந்தே தங்க இறக்குமதி வெகுவாகக் குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

China may topple India in gold demand
*******************************************************
The government will be pleased by its efforts to clamp down on gold imports.Gold demand has dropped 32% in the quarter ended September to 148 tonne over the year-ago period as import duty and other curbs made the yellow metal expensive, according to World Gold Council (WGC).

Related Posts

error: Content is protected !!