தகவல் அறியும் உரிமைச்சட்டம்:தரவரிசை பட்டியலில் இரண்டாமிடம் பிடித்த இந்தியா!

தகவல் அறியும் உரிமைச்சட்டம்:தரவரிசை பட்டியலில் இரண்டாமிடம் பிடித்த இந்தியா!

தகவல் அறியும் உரிமை சட்டம் பற்றி வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அமெரிக்கா ரஷ்யா உட்பட 95 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் இந்தியா 2வது இடத்தில் இருப்பதாகவும் செர்பியா முதலாவது இடத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 - r t i map
அரசிடம் அல்லது அரசு உதவிபெறும் நிறுவனங்களிடமிருந்து மக்கள் உரிமையுடன் தகவல்களை அறிந்து கொள்வதற்கு ஏதுவாக உருவாக்கப்பட்ட சட்டம் தகவல் அறியும் உரிமை சட்டம். இந்தியாவில் இச்சட்டம் டிசம்பர் மாதம் 2004 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டு மே 11ம் தேதி 2005ம் ஆண்டு மக்களவையிலும், மே 12,ம் தேதி 2005ஆம் ஆண்டு மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. ஜூன் 15 2005ம் ஆண்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டது. ஜூன் 21ம் தேதி 2005,ம் ஆண்டில் அரசுப் பதிவியழில் வெளியிடப்பட்டு 2005ம் ஆண்டு அக்டோபர் 12ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.

இந்நிலையில் உலக அளவில் இந்த சட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் தரம் குறித்து சமீபத்தில் ஐரோப்பிய மற்றும் கனடாவைச்சேர்ர்ந்த 2 மனித உரிமை அமைப்புகள் நடத்திய ஆய்வில் செரிபியா 135 புள்ளிகள் பெற்று முதல் இடத்திலும், இந்தியா 130 புள்ளிகள் பெற்று 2வது இடத்திலும் உள்ளது.

இந்த ஆய்வில் சட்டத்தின் நடைமுறைகள், விதிவிலக்குகள் மற்றும் மறுப்புகள், முறையீடுகள், பொருளாதார தடைகள், பாதுகாப்புகள் மற்றும் ஊக்குவிப்பு, நடவடிக்கைகள், அணுகுமுறைகள் உள்ளிட்ட 7 காரணிகள் கொடுக்கப்படிருந்தன.

மேலும் இதுகுறித்து பேசிய பாஸ்கர் பிரபு சட்டத்தில் வெளிப்படை தன்மை இல்லாததால் சட்ட கட்டமைப்பு குறித்து தவறான புரிந்துணர்தல் இருக்கிறது. எனவே தகவல் அறியும் உரிமச்சட்டம் பற்றி நகரங்களில் விழிப்புணர்வு பட்டறைகள் நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தார். இந்த ஆய்வறிக்கையின் முடிவு வளரும் நாடுகளை ஒப்பிடுகையில் வளர்ந்த நாடுகளுக்கு ஒரு ஆச்சரியமான முடிவையே தருகிறது. வளர்ந்த நாடுகளில் இச்சட்டத்தின் முறையீடுகள் சரியான வகையில் இல்லை என்பதையும் காட்டுகிறது.

India’s RTI Act second best in the world
***********************************************************
ndia’s Right to Information Act has been ranked second in a survey of information laws in 95 countries, in which developed countries, such as the US and UK, ranked far behind developing nations.

Related Posts

error: Content is protected !!