டெல்லி:கெஜ்ரிவால் 2-ந்தேதி நம்பிக்கை வாக்கு கோருகிறார்

டெல்லி:கெஜ்ரிவால் 2-ந்தேதி நம்பிக்கை வாக்கு கோருகிறார்

டெல்லியில் “ஆம் ஆத்மி’ தலைமையிலான புதிய அரசு பதவியேற்கும் நிகழ்வு ராம்லீலா மைதானத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் நேற்று சனிக்கிழமை நடந்தது. டெல்லி முதல்வராக அரவிந்த் கேஜரிவாலுக்கு நஜீப் ஜங் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.இதையடுத்து ஜனவரி 1ம் தேதி முதல் கூட்டத்தொடர் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி 2-ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
AAP convener Arvind Kejriwal takes oath as Delhi Chief Minister
டெல்லி மாநில முதல்-மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று பதவி ஏற்றார். பதவி ஏற்ற 7 நாட்களுக்குள் சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்று அவரிடம் கவர்னர் நஜீப் ஜங் ஏற்கனவே கூறி இருந்தார். அதன்படி, அரவிந்த் கெஜ்ரிவால், வருகிற 2-ந்தேதி, சட்டசபையில் நம்பிக்கை தீர்மானம் தாக்கல் செய்து, வாக்கெடுப்பை சந்திக்கிறார்.

இதற்காக, 1-ந்தேதி சட்டசபை கூட்டத்தொடர் தொடங்குகிறது. சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தல் 3-ந்தேதி நடைபெறுகிறது.

70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டசபையில், குறைந்தபட்ச மெஜாரிட்டிக்கு 36 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஆம் ஆத்மிக்கு 28 உறுப்பினர்களும், காங்கிரஸ் கட்சிக்கு 8 உறுப்பினர்களும் இருப்பதால், மெஜாரிட்டிக்கு தேவையான பலம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

AAP government in Delhi will seek vote of confidence on January 2

***********************************************************
The Arvind Kejriwal-led AAP goverment in Delhi will seek a vote of confidence on January 2 on the floor of Delhi assembly.

error: Content is protected !!