டுவிட்டரின் தனி மெசேஜிங் சர்வீஸ்!வாட்ஸப், ஃபேஸ்புக் மெசெஞ்சருக்கு ஆப்பா?

டுவிட்டரின் தனி மெசேஜிங் சர்வீஸ்!வாட்ஸப், ஃபேஸ்புக் மெசெஞ்சருக்கு ஆப்பா?

நேத்து கூகுள் டோன் போட்ட உடனே அடுத்து இந்த விஷயம் தான் உங்களுக்கு சொல்லனும்னு எனக்கு ஆசை – டுவிட்டர் பக்கம் அடிக்கடி காத்து வாங்கும் காரணம் என்ன ஃபீல் பண்ணி சொன்னாலும் உடனே அது பொதுவுடமை ஆகி விடுவதால்தான். டுவிட்டர்னாலே அக்க போர் பண்ணும் ஆட்கள் தான் என்றாகிவிட்டதால் டிவிட்டர் பொது விவாத மேடையாக இருந்த ஒன்று இனிமே தனிவுடமையாக்கி விட்டது.
ravi 28
இது புதுசா என்ன இருக்குன்னு கேட்டாலும் – இது வாட்ஸப் / ஃபேஸ்புக் மெசேஞ்சர் மற்றும் குறுஞ்செய்தியை தூக்கி சாப்பிடும் என்பது என்னுடைய கணிப்பு. இந்த தனி மெசேஜிங் சர்வீஸை ஒரு தனி நபருக்கோ அல்லது குரூப் அல்லது பொது மெசேஜாகவோ இனிமேல் அனுப்ப முடியும் என்பதால் பொது இடத்தில் கேள்வி கேட்டு எம்பேரஸ் செய்ய தேவையில்லை.

ஆனாலும் சில பிரபலங்களுக்கு கேள்விக் கணை கொன்னு களையும் அளவுக்கு ஜாஸ்தி ஆகி விடும் என்பது அடுத்த சோதனை.ஆனாலும் பிடிக்கலைனா ஸ்டாப் ரிசிவீங் மெசேஜ்னு ஆப்ஷனும் இருப்பதால் கொஞ்சம் நிம்மதி.

இது எப்படி பயனளிக்கும் ரவினு நீங்க கேட்டா – உதாரணத்திர்க்கு ஒரு கேமரா விற்பனைக்குனு போட்டா ஒவ்வொருவரிடமும் நீங்க தனியா துண்டு போர்த்தி விலை பேச முடியும் மற்றும் பொது பிரபலத்திடம் உண்மையாய் பர்ஸனலாய் கான்டெக்ட் செய்ய ஒர் சான்ஸ் என பல உண்டு –

உடனே தூசு தட்டி டிவிட்டர் பக்கம் போயிராதீங்கப்பூ………………என்னதான் நீங்க சொன்னாலும் பாஸ் டிவிட்டர் இன்னும் பல பேருக்கு சங்கூதுற வயசில சங்கீதாவா கதை தான் பாஸ்னு நீங்க மைன்ட் வாய்ஸ்ல பேசினது எனக்கு கேக்கூது

Twitter’s private messaging feature will KILL whatsapp / FB messenger / SMS business

error: Content is protected !!