டுப்ளிகேட் பான் கார்டுகளை கணடறியும் டெக்னாலஜி வந்தாச்சு!

டுப்ளிகேட் பான் கார்டுகளை கணடறியும் டெக்னாலஜி வந்தாச்சு!

இன்றையத் தகவல்படி 24.37 கோடி பேர் பான் கார்டு உபயோகித்து வருகின்றனர். ஆனால் போலியான கார்டுகள் எவ்வளவு என்பதை பற்றி சரியான விவரங்கள் இல்லை. இதனிடையே போலி பான் கார்டுகளை கண்டறிவதற்கு எலெக்ட்ரானிக் முறையில் இயங்கக்கூடிய தொழில் நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு ‘இன்கம் டேக்ஸ் பிஸினஸ் அப்ளிகேஷன் (ஐடிபிஏ)’ என்று பெயரிட்டுள்ளனர். இதை வருமான வரித்துறை கையாள இருக்கிறது.
PAN-Card-
இதற்கு முன் அதிகாரிகளைக் கொண்டுதான் போலியான பான் கார்டுகள் கண்டறியப்பட்டன. தற் போது இந்த புதிய தொழில்நுட்பத் தால் மிகத் துல்லியமாக போலி யான கார்டுகளை கண்டறிய முடியும் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரி வித்தார். பழைய பான் கார்டுகளாக இருந்தால் அதிகாரிகளைக் கொண்டே சோதிக்கப்படும் என்று மேலும் கூறினார்.

இரண்டு கார்டுகளை பயன் படுத்தி நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்திருக்கின்றனவா என்று உறுதிபடுத்த வருமான வரித்துறை உத்தரவிட்டு உள்ளது. போலியான கார்டுகளை பயன்படுத்தி வரிஏய்ப்பு மற்றும் கருப்புப் பண மோசடி என நிறைய நடந்துள்ளன.போலி பான் கார்டுகளை உபயோகித்துவருபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கார்டை ஒப்படைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்படி ஒப்படைக்கவில்லை என்றால் அந்த நபர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.

error: Content is protected !!