டிவிடியைப பார்த்து எக்சர்சைஸ் பண்றீங்களா? அச்சச்சோ அது ரொம்பத் தப்பு!

டிவிடியைப பார்த்து எக்சர்சைஸ் பண்றீங்களா? அச்சச்சோ அது ரொம்பத் தப்பு!

நம்மில் பெரும்பாலானோருக்கு உடற்பயிற்சியைப் பற்றி போதிய அளவு விழிப்புணர்வில்லை என்று தான் சொல்ல வேண்டும் உடற்பயிற்சி எது, அதை எப்படி உடற்பயிற்சி செய்வது, ஜிம்முக்கு போய்தான் அல்லது உபகரணங்களைக் கொண்டுதான் உடற்பயிற்சி செய்ய முடியுமா? என பல்வேறு குழப்பங்கள் இன்றளவும் இருக்கிற து .இதனிடையில்தான் அமெரிக்காவின் ஒரேகான் பல்கலைக்கழக பேராசிரியர்கள் நடத்திய ஆய்வில் உடற்பயிற்சி டி.வி.டி.-கள் பார்த்துக்கொண்டு உடற்பயிற்சி செய்வது தீங்கு விளைவிக்கும் என்று தெரிய வந்துள்ளது.
dvd fitness
இந்த ஆய்வை மேற்கொண்ட பேராசிரியர் பிராட் கார்டினல் இது குறித்து “ உடற்பயிற்சி டி.வி.டி.-களில் அதிக கவர்ச்சியாக, நம்பமுடியாத மனித படங்கள் காட்டப்படுகின்றன. அதை பார்த்துக்கொண்டு உடற்பயிற்சி செய்பவர்கள் அந்த கற்பனையான உருவங்களை நம்பும்படி தூண்டவும், வற்புறுத்தவும் படுகிறார்கள்.இது உடற்பயிற்சி செய்பவர்களை மனதளவில் பாதிப்பது எங்கள் ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.”

உலகம் முழுவதும் பரவியுள்ள உடற்பயிற்சி டி.வி.டி. சந்தையானது சுமார் 250 மில்லியன் டாலர் மதிப்புக்கொண்டது என்பதும் இந்திய உடற்பயிற்சி சந்தையின் மதிப்பு 2015ஐ பொருத்தவரை நூறு பில்லியனாக இருக்கிறது. இது ஒவ்வொரு வருடமும் இருபதிலிருந்து இருபத்தைந்து சதம் வரை உயர்ந்துகொண்டே இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!