டிஜிடல் கரன்சி – இந்தியாவின் பொருளாதாரத்தை தலைகீழாக மாற்றும்?!

டிஜிடல் கரன்சி – இந்தியாவின் பொருளாதாரத்தை தலைகீழாக மாற்றும்?!

சென்ற பதிவில் Digital Currency (DC) என்றால் என்ன, Fiat Currency (FC) என்று சொல்லப்படும் Physical Currency ல் இருந்து எப்படி வேறுபடுகிறது என்றெல்லாம் பார்த்தோம். அதில் Digital Transaction க்கும் DC க்கும் என்ன வித்தியாம் என்ற கேள்வி கொஞ்சம் சரியானதல்ல, ஏனெனில் Digital Transaction இரண்டுக்குமே பொதுவானது. ஆனால் Physical Transaction என்பது Fiat Currency க்கு மட்டுமே பொருந்தும். ஏனெனில் Digital Currency என்பது Digital Form (Virtual) ஆக இருப்பதால் அதை தொட முடியாது. அதனால் Digital Transaction மட்டுமே செய்ய முடியும்.

அந்த பதிவை பார்க்காதவர்கள் பார்க்க:👇 க்ளிக் செய்க

💕 அது என்ன டிஜிடல் கரன்ஸி?

நம் ரூபாய் நோட்டில் இருக்கும் சீரியல் எண் அந்த நோட்டுக்கு மட்டுமே இருக்கும், இது DC க்கும் இருக்கும் ஆனால் அதை நாம் அல்லது சிஸ்டம் நேரடியாக பார்க்க முடியாது. ஏனெனில் அதை Encrypt செய்திருப்பாரகள். ஆமாம் அது என்ன Encrypt? உங்கள் ATM Pasword 4132 என்று இருக்கிறது. அதை மறந்து விடாமல் இருக்க டைரியில் எழுதுகிறீர்கள். அப்படியே எழுதினால் அதை யாராவது பார்த்து பயன்படுத்திவிடும் ஆபத்து இருப்பதால் அதற்கு இணையாக இருக்கும் ABCD எழுத்துக்களாக வரும் DACB என்று எழுதுகிறீர்கள். இதைதான் Encrypt என்று சொல்கிறோம். அதையே மீண்டும் எண்களாக மாற்றுவது Decrypt என்று சொல்வோம். இது நாம் சாதாரணமாக Encrypt செய்த ஒரு நிலை, DC யில் இருக்கும் எண்களை மிக பலமான KEY கொண்டு மாற்றுவதால் அதை எளிதல் கண்டுபிடிக்க முடியாது. இந்த Encrypt, Decrypt என்பது இதன் தாரக மந்திரம் என்பதால்தான் இதை Crypto Currency என்றும் சொல்கிறார்கள்.

அந்த DC என்ற “ஆ காகஸம் அண்ட காகஸம் அபூ காகஸம் திறந்திடு சீஸே” என்பது போல அதை அந்த Central Bank Digital Currency யில் அதன் கடவுச்சொல் அல்லது எண் மூலம் பயன்படுத்திக் கொள்ளலாம். சரி ஒரு வேளை இதை யாராவது கண்டுபிடித்து விட்டால் என்பதுதான் முக்கிய ரிஸ்க் அல்லவா? ஆனால் இந்த காசு யாரிடம் இருந்து யாருக்கு வந்தது, யாருக்கு போகிறது, எதற்காக போகிறது என்ற Ledger இருக்கும். அதாவது அதன் Transaction History அந்த சிஸ்டத்தில் இருக்கும்போது, நான் அந்த சீக்ரெட் நம்பரை சொன்னாலும் அது ஏற்றுக்கொள்ளாது என்பது மட்டுமல்ல, என் நோக்க தவறானதாக இருந்தால், அதை வைத்தே என்னை உள்ளே தூக்கி வைத்து விடுவார்கள் என்பதால் இது பாதுகாப்பானது.

அதாவது அந்த DC எண்கள் Group ஆக Block, Block ஆக, முந்தையை எண்ணுக்கும், அடுத்த எண்ணிலும் தொடர்பு கொண்ட Blackchain எனும் Linked List போல இணைந்தே இருக்கும். அதில் புதியதாக ஒரு எண்ணை புகுத்த முயன்றால், அது குறைந்த பட்சம் அந்த முன், பின் இருக்கும் எண்களில் மாற்றம் செய்ய வேண்டும். அதை செய்தாலும், அதை அந்த Block ல் உள்ள 100 எண்ணிக்கை கொண்ட ₹50 நோட்டுக்கள் எனும் கூட்டுத்தொகை ₹5000 மட்டுமே இருக்க முடியும். இப்போது புதிதாக நுழைக்கப்பட்ட ஒரு ₹50 நோட்டு, அதன் கூட்டு தொகையை ₹5050 என்று மாற்றிவிட்டால் Cross Verification ஆக Total Mismatch ஆகும். உடனே அந்த Block ல் உள்ள அதன் Transaction History ஐ Check செய்தால், புதியதாக நுழைக்கப்பட்ட DC மட்டுமல்ல, அதை யார் நுழைத்தார்கள் என்பதும் தெரிந்துவிடும். இதுபோல BitCoin ல் 2011 ஒரு முறை நடந்து, அதை இப்படித்தான் கண்டு பிடித்தார்கள்.

சரி இந்த எண்களை வைத்திருக்கும் சிஸ்டம் ரிப்பேர் ஆகிவிட்டால், எல்லாம் கோவிந்தா அல்லவா? அல்லது போரில் தாக்கி அழிக்கப்பட்டால் என்ன ஆவது?

ஆம், அதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஆனால் அந்த விபரங்கள் Backup System மூலம் தர்மபுரி, நந்தியால், நாக்பூர், காந்திகிராம் என்பது போன்று மிகவும் பாதுகப்பான ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் Mirroring என்ற கான்செப்டில் அதன் Copy இருக்கும். ஒரு System Fail ஆனால் மற்ற சிஸ்டங்கள் அதை எடுத்து செய்துவிடும்.

ஆனால் இதை பயன்படுத்த நமக்கு குறைந்த பட்சம் ஒரு ஃபோன் வேண்டுமல்லவா? படிக்கவே தெரியாதவர்கள் இதை பயன்படுத்த முடியுமா?

இது உடனே எல்லா பணமும் DC ஆக மாறிவிடாது. படிப்படியாக இது நடக்கும். முற்றிலும் அது DC ஆக மாற 25 க்கு மேற்பட்ட வருடங்கள் கூட ஆகலாம். ஆனால் இந்தியா மட்டுமல்ல கிட்டத்தட்ட எல்லா நாடுகளிலும் 80% பணத்தை பயன்படுதுபவர்கள் 20% மக்கக்தான், அதாவது கிரீமி லேயர் என்ற ஓரளவு பணக்காரர்கள். அவர்களை வழிக்கு கொண்டு வந்தாலே இதை இன்னும் ஐந்து வருடங்களில் கிட்டத்தட்ட கொண்டு வந்து சாதித்து விட முடியும். உதாரணமாக 50 லட்சத்திற்கு மேல் நடக்கும் பரிவர்த்தனைகள் அனைத்தும் DC மூலம்தான் நடக்கவேண்டும் என்று ஆரம்பித்து, அது படிப்படியாக குறைந்து ₹10000 என்று முடியும்போது அந்த 80% நோட்டுக்கள் DC ஆக மாறியிருக்கும்.

அதை எப்படி செய்வார்கள்?

மிகப்பெரிய Denomination என்று சொல்லப்படும் ₹2000 நோட்டு முதலில் DC ஆக மாற்றுவார்கள். இப்போது அந்த ₹2000 நோட்டுக்களை பார்க்கவே முடியவில்லை என்பது பலர் சொல்லும் புகார். அது பல திருட்டு பயல்களிடம் கருப்பு பணமாக மாறி இருக்கலாம். அது அப்படித்தான் போகும் என்பதற்காவே மோடி வலை விரித்து அதை செய்திருக்கலாம். அடுத்த வருடம் ₹2000 நோட்டு எல்லாம் கொடுத்து DC மாற்றிக்கொள்ளுங்கள் என்று மீண்டும் ஒரு Demonetization வரும். அப்போது இந்த கருப்பு பணம் மட்டுமல்ல களவானிப்பயல்களும் வெளியே வருவார்கள்.

இது என்ன பெரிய விஷயம்? நாங்க பினாமிகளை வைத்து இதை சென்ற முறை செய்ததைவிட இப்போது இன்னும் சிறப்பாக செய்துவிடுவோம் என்று சொல்வார்களா?

அங்கேதான் ஆப்பு காத்திருக்கிறது. நீங்கள் பினாமி மூலம் அதை மாற்றி, பின்பு புதிய நோட்டுக்களை அவர்கள் மூலம் எடுத்து மீண்டும் எங்களுக்கு வந்து விடும் என்றால் அது முடியாது. ஏனெனில் DC வெளியே எடுக்கவே முடியாது. ஒரு அக்கவுண்டில் இருந்து இன்னொரு அக்கவுண்டுக்கு மாற்றத்தான் முடியும். சரி மாற்றி விடுகிறோம் என்றால் அதுவும் முடியாது! ஆம் எதற்காக இந்த பரிவர்த்தனை நடக்கிறது? அந்த பரிவர்த்தனை சட்டத்திற்கு உற்பட்டதா? அதில் GST உண்டா? என்பது போல பல விஷயங்கள் அதில் இருக்கும். உதாரணமாக 5000 கோடி கள்ளப்பணமாக வைத்திருக்கும் ஒருவர் அதை 5000 உபிஸுக்கு 1 கோடியாக கொடுத்து அதை மாற்றலாம் அல்லவா? செய்யலாம். ஆனால் அந்த உபிஸுக்கு 1 கோடி எங்கிருந்து வந்தது? என்ற கேள்வி எழும். அவர்தான் சம்பாதித்தார் என்றால் முந்தைய வருடங்களில் வருமான வரி கட்டியிருக்கிறாரா? அந்த வருமானம் எதன் மூலம் வந்தது? இது போன்ற பல கேள்விக்களுக்கு விடை சொல்லவேண்டும்.

அஸ்க்கு, புஸ்க்கு, நான் கூலி வேலை செய்து எங்க முப்பாட்டன் காலத்தில் இருந்து சேர்த்து வைத்த பணம் இது என்று சொல்வோமல்லவா? அப்படி சொன்னால், வாடா மவனே, அப்போ 2019 ல் Demonitization செஞ்சப்ப இந்த பணம் எல்லாம் கணக்கிலேயே வரலியே அது இப்போ புதியதாக எப்படி வந்தது? வேறு ஏதாவது கதை சொன்னால், ₹50000 க்கு மேலே பணமால வைத்திருக்க கூடாது என்ற சட்டம் இருக்கும்போது, இதை நீ வைத்திருந்தது சட்டப்படி தவறு என்று பணத்தையும் பிடுங்கி கொண்டு, உள்ளேயும் தூக்கி வைத்து விடுவான்.

சரி, நாம் தங்கமாக வைத்திருந்தேன் என்றால், அரசாங்கம் அதற்கும் ஏற்கனவே உன் தங்கத்தை கணக்கில் காட்ட சொல்லி ஒரு சட்டம் கொண்டு வந்ததே, அப்போது ஏன் அரசுக்கு காட்டவில்லை என்று கேட்பார்கள். ஆம் மோடி அரசாங்கம் 2019 லிருந்தே DC நோக்கிய பயணத்திற்கு உரிய ஒவ்வொரு நகர்வுகளை செஸ் போல நகர்த்தி ஒவ்வொரு கில்லாடிகளையும் சுற்றி வளைத்துள்ளார்கள்.

சென்ற முறை செய்தது போல தங்கம் வாங்கிவிடலாம் என்றால், வாங்கிய தங்கம் முறைப்படி GST உடன் வர்த்தகம் நடந்திருக்க வேண்டும். இல்லாதபோது அந்த கடைக்காரன் அதை DC ஆக மாற்றும்போது அவன் மாட்டிக்கொள்வான். சரி, நான் டாலர் அல்லது பிட்காய்ன் ஆக மாற்றி விடுவேன் என்றால், சரி அந்த பணத்திற்கு உனக்கு பிட்காய்ன் கொடுக்கிறவன் அந்த பணத்தை மாற்றித்தானே ஆகவேண்டும்? அவன் என் செய்வான்?
இப்ப புரியுதா, மோடி கருப்பு பணத்திற்கு ஆப்பு வைக்கல, களவானி பயல்களுக்கு ஆப்பு வெச்சுட்டார்னு. இதில் இன்னும் பல சூட்சுமங்கள் இருக்கிறது, அதை மேலும் பகிர்வது நல்ல நோக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கலாம் என்பதால் தவிர்க்கிறேன்.

என்ன செய்தாலும், கண்டிப்பாக பிரச்சினைகள் என்று ஒன்று கண்டிப்பாக இருக்கும் அல்லவா? வில்லன் என்று சிலர் வருவார்கல் அல்லவா?
இதற்கு முக்கிய எதிரி Bitcoin போன்ற அரசு சாராத Crypto Currencies இதற்கு மாற்றாக கள்ள சந்தையில் பயன்படுத்தலாம். இதையெல்லாம் யோசிக்கும் அரசு, அதை யோசிக்காதா? அந்த நெட்வொர்க்கில் இருந்தால் Bitcoin எங்கிருந்து எங்கே போகிறது என்ற வெளிப்படையான நெட்வொர்கில் கட்டம் கட்டிவிட்டு, அதை செல்லாமல் ஆக்கி அவர்களை பிடிக்க முடியுமே! அதே சமயம் Bitcoin என்பது Speculative Currency என்பதால் அதற்கு சட்ட சிக்கல்கள் வரும் என்றால் அதன் மதிப்பு வெகுவாக சரிந்துவிடும். அதாவது 2021 ஆண்டு கொரானா தாக்கத்தில் இருக்கும் போது 1 பிட்கய்ன் $30000 ஆக இருந்து அது அந்த வருட இறுதியில் $70000 ஆக யூக (Speculative) வர்த்தகம் மூலம் உயர்ந்தது. அது மீண்டும் 2022 ல் $35000 ஆக குறைந்தது என்பதை நினைவில் கொண்டால், அரசுகள் அதை செல்லாது என்று அறிவிக்கும்போது பிட்காய்னுக்கு மதிப்பில்லாமல் போய் விடும்.

சரி, ₹2000 நோட்டுக்கள் மட்டும்தானே போகும், ₹500, ₹200, ₹100 என்று இருக்குமே? அதை வாங்கி வைத்துக்கொள்வோமே?

₹2000 முடிந்தவுடன் அடுத்த ஒரு சில வருடங்களில் ₹500 ஆப்பு ரெடியாகிவிடும். அப்போ மாட்டிக்கொள்வீர்கள் அல்லவா? அது மட்டுமல்ல RBI பிரிண்ட் செய்த ₹2000, ₹500 நோட்டுக்கள் மட்டுமே நமது மொத்த கரன்ஸியில் 87% இருக்கிறது என்றால், இதை மாற்றினாலே போதுமே, மற்றதை அப்படியே விட்டு விட்டால் கூட சமாளிக்க முடியும் அல்லவா?

இதனால் வேறு என்ன மாதிரி நன்மைகள அரசுக்கு கிடைக்கும்?

நமக்குள் நடக்கிற ஒவ்வொரு பண பரிவர்த்தனையும் சட்ட ரீதியாக இருக்க வேண்டும். சரி, நாளை Tasmac ல் நான்கு பீர் பாட்டில் வாங்கினால், நான் DC உபயோக்கிக்கிறேன். அப்போது பாட்டிலுக்கு MRP க்கு மேல் வாங்கும் ₹10 கொடுக்க தேவையில்லை. அதை நான் கொடுத்தால் கொடுத்த பாட்டிலின் மதிப்பிற்கும், வாங்கிய காசுக்கும் Tally ஆகாது. அப்போ அவன் மாட்டிக்குவான். நான் DC வாங்குகிற ஒவ்வொரு பாட்டிலும் அரசின் கணக்கில் வரவேண்டும் எனும்போது அதற்கு முறையாக GST கட்டவேண்டும். 60% வரை டாஸ்மாக் சரக்குகள் கள்ள சந்தையில் விற்கப்படுகிறது. அதனால் அரசுக்கு பாதிக்கு மேல் வரி இழப்பு ஏற்படுகிறது என்று நம் தமிழக நிதி அமைச்சர் சொன்ன விஷயம் நியாபகத்திற்கு வருகிறதா? இது போன்ற விஷயங்கள் படிப்படியாக் குறையும் என்றால் அரசுக்கு வரி வருமானம் பெருமளவில் கூடும் . டாஸ்மாக் என்பது கூட பிரச்சினை எனும்போது, தங்கம்.வாங்கினால் பெரிய தொகை வேண்டும், அதற்கு DC தான் உபயோகிக்க முடியும். இப்படி ஒவ்வொரு விஷயமாக டிஜிடல் கரன்ஸிக்குள் வந்தால் தவறான பரிவர்த்தனைகள் மாட்டிக்கொள்ளும். அது மட்டுமல்ல, இன்னும் கரன்ஸியாக இருக்கும் வர்தகங்கள் கூட முறையான வர்த்தக தொடர்பு ஏற்படும்போது அதன் உண்மைத்தன்மை வெளிவரும்.

ஒரு வேளை திடீரென நம் டெலிபோன் நெட்வொர்க் எல்லாமே காலி ஆகிவிட்டால்?

இதற்கு Data Bandwith தேவையில்லை, சாதாரண போன் கனெக்‌ஷனே போதும் என்றாலும் அதற்கான வாய்ப்புகள் உண்டு. ஏன் புளூடூத் போன்ற எளிய வகை பரிவர்த்தனை மூலம் டிஜிடல் பர்வர்த்தனை செய்ய முடியும். நெட்வொர்க் வந்தவுடன் அது லெட்ஜர் சிஸ்டத்தில் அப்டேட் ஆகிவிடும். ஒரு வேலை என் போன் திருடப்பட்டு என் காசுகள் எல்லாம் அவர்கள் அக்கவுண்டுக்கு மாற்றிவிட்டால்? போனா போகுது விட்டு விடுங்கள். போலீசில் புகார் சொன்னால் போதும், அந்த பணம் யார் அக்கவுண்டுக்கு போனது, எங்கே இருக்கிறது என்பது லெட்ஜரில் இருக்கும். உங்கள் பணத்தை பிடிக்க மட்டுமல்ல, அது சம்பந்தப்பட்ட திருடனுகளை பிடிக்கவும் இது உதவும். அதாவது கட்டுமரம் செஞ்ச Scientific Corruption எல்லாம் இனிமேல் எடுபடாதது மட்டுமல்ல, அந்த திருட்டு கும்பலில் எவன் எல்லாம் இருக்கிறான் என்பதும் தெரிந்துவிடும் என்றால் அதை செய்வார்களா?

அப்போ தேர்தலுக்கு காசு எப்படி கொடுப்பது? உபிஸுக்கு ₹200, பிரியாணி, குவார்ட்டர் எல்லாம் எப்படி கொடுப்பது? அடங்கொக்கமக்கா… மாட்டிகிட்டேயா என்றால், அஸ்க்கு புஸ்க்கு, நான் டிஜிடல் மூலமாகவே கொடுப்பேன் என்றாலும், அதை எதற்காக கொடுக்கிறாய், அதற்கு பணம் எங்கிருந்து வந்தது என்று பல கேள்விகளும் தொடர்ந்து வருமே?! எனவேதான் இந்த ₹2000 மேட்டர் அடுத்த தேர்தலுக்கு முன்பு வரும் என்பது என் பலமான யூகம். அதில் பணம் கொடுத்தே ஓட்டு வாங்கியவர்கள் வண்டவாளம் எல்லாம் தண்டவாளத்தில் ஏறிவிடும் அல்லவா? எனவேதான் காங்கிரஸ் முக்தி மட்டுமல்ல, திமுக முக்தி, குஜ்லி முக்தி என்று பல கட்சிகள் வெளிநாடுகளில் இருந்து வரும் பணம் எல்லாம் பனால். இங்கே பாஜகவை அசைக்க முடியாது என்பதைவிட கேப்ப மாரி கட்சிகளை அழித்து விடமுடியும் என்பதுதான்.

சமீபத்தில் வாஷிங்டன் போஸ்டில் வந்த விஷயம், உலகத்தில் அமெரிக்கா முதல் 7 முக்கிய நாடுகள் மோடியை 2024 ல் எப்பாடு பட்டாவது தோற்கடித்தே தீர வேண்டும் என்ற பெரும் முயற்சியை கையில் எடுத்துள்ளது என்று. சரி, அவர்கள் பயன்படுத்தும் முக்கியமான ஆயுதம் என்பதே கோடிக் கணக்கான மாநில கட்சிகள், NGO க்கள் மூலமாக வாரி இறைக்கும் என்பதுதானே? அப்போது இவையெல்லால் உள்ளே வந்தபின் அரசு இந்த ₹2000 க்கு வேட்டு வைத்தால், எல்லா களவானி பயல்களும் மாட்டிக் கொள்வானுகளே? அது மாறியபின், பெருமளவில் அதை செய்ய முடியாதபோது என்ன செய்வார்கள்? அப்போ அந்த பணமும் அரசுக்கு ஆதாயமாகி விடுமே?

Digital Currency என்பது உலகின் மிகப்பெரிய மாற்றம். அதுவும் 30% க்கு மேலே இன்றும் கருப்பு பணமாக புழங்கும் இந்தியா போன்ற நாடுகளில் 80% பரிவர்த்தனை சட்டபூர்வமாக மாறும். அப்படி மாறும்போது நம் GDP குறைந்த பட்சம் 20% உடனே உயரும் என்றால், 2025 லேயே உலகத்தின் மூன்றாவது பெரிய பொருளாதார சக்தியாக வளர்ந்து விடுவோம். பெரும்பான்மையான வரி ஏய்ப்புகள் தடுக்க முடியும் என்பதால், அரசுக்கு வரி வருமானம் மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும். அதனால் வரியை வெகுவாக குறைத்து மக்கள் சுமையையும் குறைக்க முடியும்.

எனவே 2019 நவம்பரில் நடந்த Demonitization என்பது ஒரு முன்னோட்டம் மட்டுமல்ல, Baseline என்று சொல்லப்படும் அடித்தளம். அதை கருப்பு பணத்திற்கு எதிரான Temporarily Trial என்று சொல்லலாம். அதன் Permanent என்பது இந்த Digital Currency என்பதே. இப்போது மோடி அரசு செய்த 50 கோடி ஏழைகளுக்கான வங்கி கணக்கு, அதன் மூலம் Subsidiary மற்றும் 100 நாள் வேலை திட்டத்திற்கான சம்பளம், Digital Transaction என்று பல டாட்களை கனெக்ட் செய்து பாருங்கள், மோடி அரசின் நோக்கம் தெளிவாக எதை நோக்கி செல்கிறது என்று புரியும். மோடி அரசு இந்த மிக முக்கியமான நோம்க்கத்தில் பயணதித்தால் 2ஜி வழக்கு, நிலக்கரி வழக்கு என்று பல வழக்குகளை பெரிய அளவில் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது . ஏனெனில், மாப்ள எங்கே போய்டுவே, கொள்ளை அடிக்கும்வரை அடி, Digital Currency ல உன்ன வெச்சு செய்யறேன் பார் என்பதுதான் உங்களின் பல கேள்விகளுக்கான விடை.

அடுத்த நவம்பரில் காளியின், ஆம், மோடியின் அடுத்த ஆட்டத்தை பார்க்கத்தான். போகிறீர்கள். வாங்கடா வாங்க என்று சொல்லாமல் சொல்கிறார்! இதன் மூலம் இந்தியா உலகின் வல்லரசு ஆவதை யாரலும் தடுக்க முடியாது.

மரு.தெய்வசிகாமணி

error: Content is protected !!