ஜிஎஸ்எல்வி – டி5 ராக்கெட்ஜன. 5ல் விண்ணில் செலுத்தப்படும்!

ஜிஎஸ்எல்வி – டி5 ராக்கெட்ஜன. 5ல்  விண்ணில் செலுத்தப்படும்!

தகவல் தொடர்பு வலிமையைப் பெருக்கும் வகையில் கடந்த 2010,ல் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்பட்ட ஜிஎஸ்எல்வி,டி3 ராக்கெட் தோல்வியடைந்தது. இதையடுத்து, 2010 டிசம்பரில் ரஷ்ய நாட்டு உதவியுடன் அடுத்த ஜிஎஸ்எல்வி ராக்கெட்டை இஸ்ரோ அனுப்பியது. அந்த முயற்சியும் தோல்வியடைந்தது. இந்நிலையில், நவீன தொழில்நுட்பங்களுடன் புதிதாக ராக்கெட் தயாரிக்கும் பணியை இஸ்ரோ தொடங்கியது. அதன் படி ஜிஎஸ்எல்வி,டி5 ராக்கெட்டை இஸ்ரோ விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். இந்த ராக்கெட் அனைத்து சோதனைகளையும் கடந்து விண்ணில் செல்லத் தயாராக உள்ளது. அதி நவீன கிரயோஜெனிக் இன்ஜினுடன் விண்ணில் ஏவப்படவுள்ள இந்த ராக்கெட் ஜிசாட்,14 என்ற சாட்டிலைட்டைச் சுமந்து செல்கிறது. இந்த சேட்டிலைட் மூலம் தகவல் தொடர்பு மேலும் வலுப்படும் என்றும வரும் ஜனவரி 5ம் தேதி இந்த ஜிஎஸ்எல்வி – டி5 ராக்கெட் விண்ணில் செலுத்த முடிவு செய்துள்ளதாகவும் இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Tec ISRO_gslv d5  26
ஜிஎஸ்எல்வி-டி5 ராக்கெட் வரும் ஜனவரி 5 ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) தலைவர் கே. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது,”ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி-டி5 ராக்கெட்டை விண்ணில் செலுத்தத் திட்டமிட்டுள்ளோம். தகவல் தொடர்பு விண்கலமான ஜிசாட் 14-ஐ பூமியின் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தும் வகையில், ராக்கெட்டின் 3 நிலைகளும் சரியாக இணைக்கப்பட்டுள்ளன. ராக்கெட்டை செலுத்துவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் வருகிற 26-ஆம் தேதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, வருகிற 27-ஆம் தேதி திட்ட தயார்நிலை ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெறும். இந்தக் கூட்டத்தில் ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான தேதி, நேரம் ஆகியவை முடிவு செய்யப்படும்.

இந்த ராக்கெட்டை கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதி மாலை 4.50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவுவதற்கு தயார்படுத்திய போது நடைபெற்ற கடைசிக் கட்ட சோதனையில், ராக்கெட்டில் அஃப்னர்-7020 என்ற அலுமினியம் கலவைப் பொருளால் செய்யப்பட்ட எரிபொருள் தொட்டியில் விரிசல் ஏற்பட்டு, கசிவு ஏற்படுவது கண்டறியப்பட்டது. இதனால், ராக்கெட்டை ஏவும் பணி நிறுத்தப்பட்டது. அதன்பிறகு, ராக்கெட் ஒருங்கிணைப்புக் கட்டடத்திற்கு ஜிஎஸ்எல்வி-டி5 கொண்டு செல்லப்பட்டது. தற்போது, ஜிஎஸ்எல்வி-டி5 ராக்கெட்டில் புத்தம் புதிய எரிபொருள் தொட்டி இணைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார் ராதாகிருஷ்ணன்.

error: Content is protected !!