ஜாக்கி சான் பாடகராக அறிமுகமாகும் “ போலீஸ் ஸ்டோரி 2013 “ ஆல்பம் + பாடல் வீடியோ

ஜாக்கி சான் பாடகராக அறிமுகமாகும் “ போலீஸ் ஸ்டோரி 2013 “ ஆல்பம் + பாடல் வீடியோ

இன்றளவில் உலக பிரபல நாயகர்களில் முக்கிய நாயகனாக, குழந்தைகளை மிகவும் கவர்ந்த நாயகனாக இன்றும் இருப்பவர் ஜாக்கி சான். அதிலும் இவரது “போலீஸ் ஸ்டோரி” படத்தை பார்க்காதவர்களே இருக்க முடியாது. மிக முக்கியத்துவம் வாய்ந்த இப்படத்தின் தொடர் படைப்பாக இப்பொழுது “போலீஸ் ஸ்டோரி 2013” படத்தை தயாரித்து நடித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புடன் இப்படம் உலகம் முழுக்க இம்மாதம் இறுதியில் வெளியாகிறது.

தமிழ்நாட்டில் தமிழிலும், ஆங்கிலத்திலும் பொங்கல் வெளியீடாக வருகிறது. தமிழகமெங்கும் 200-க்கும் அதிகமான திரை அரங்குகளில் வெளியிடப்படுகிறது.

மேலும் இப்படத்தின் சிறப்பு அம்சமாக முதன்முறையாக ஜாக்கிசான் ஒரு பாடலை பாடியுள்ளார். யு – டியூபில் பாப்புலராக இருக்கும் இப்பாடல் அனைவரின் ஆர்வத்தையும் தூண்டியுள்ளது. இப்படத்தை தமிழ் நாட்டில் சுரபி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.மோகன் வெளியிடுகிறார். ‘தளபதி’ ‘முத்து’ ‘வில்லு’ ‘குருவி’ ‘ ராம்போ – 3’ போன்ற 250-க்கும் மேற்ப்பட்ட ஆங்கிலம், தமிழ் படங்களை என்.எஸ்.சி ஏரியாவில் 32வருடமாக விநியோகம் செய்துள்ள இவர் இப்படத்தை 3D-யில் வெளியிடுகிறார்.

பாடலைக் கேட்க்:https://www.youtube.com/watch?v=mO_xF8xJaUA

டிரைலருக்கு ::https://www.youtube.com/watch?v=JTu_NoMACd4

error: Content is protected !!