சோலார் பைக் – மதுரை மாணவன் கார்த்திக் சாதனை!

சோலார் பைக் – மதுரை மாணவன் கார்த்திக் சாதனை!

“பெட்ரோலும் வேண்டாம்; மின்சாரமும் வேண்டாம்; சூரியன் மட்டும் போதும். உங்கள் வாகனம் ஓடும்” என்று நம்பிக்கை தருகிறார் இவர். படிப்பது தொழில் மேலாண்மை என்றாலும், இயந்திரவியலின் மேல் உள்ள ஈடுபாடு காரணமாக சோலார் பைக்கைத் தயாரித்திருக்கிறார் மதுரையைச் சேர்ந்த கார்த்திக்
solar bike
“இயந்திரவியல் துறையில் படிக்கும் என் நண்பர் ஹரியுடன் இணைந்து இந்த பைக்கை உருவாக்கியிருக்கிறேன். முதல் கட்டமாக, சூரிய ஒளியை மின்சக்தியாக மாற்றக் கூடிய சோலார் பேனல்களில் சிறிது மாற்றங்களைச் செய்து வைத்துக் கொண்டேன். சூரிய சக்தியை மின் சக்தியாக மாற்றுவதற்காக தனி எலெக்ட்ரிக் டிரைவ் வீல் மற்றும் மோட்டார்களையும் வடிவமைத்தோம்.

ஹெட்லைட், இண்டிகேட்டர் போன்றவற்றிக்கு சைக்கிளில் பயன்படுத்தும் டைனமோவையே பயன்படுத்தினோம். பைக்கின் பாகங்களையும், சோலார் பாகங்களையும் இணைத்து முழுமையாக வண்டி தயாரானபோது சாலையில் ஓடத் தகுதியான நிலையில் இருந்தது.

வண்டியை எங்கள் கல்லூரியில் டெமோ செய்து காண்பித்த போது பெரிய அளவில் அங்கீகாரம் கிடைத்தது. அதன் பிறகு மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம் முன்பாக ஓட்டிக் காண்பித் தோம். எங்களைப் பாராட்டி வாழ்த்துக்கள் சொன்னார்” என்று ஆர்வத்துடன் விவரிக்கிறார் கார்த்திக்.

“அலுவலகம் செல்பவர்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தங்கள் இரு சக்கர வாகனத்தை வெயிலில் பார்க்கிங் செய்து விட்டால் போதும். அதன்பிறகு, குறைந்தபட்சம் 35 கிலோ மீட்டர் முதல் அதிகபட்சமாக 40 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கலாம்.

இந்த வண்டியை உருவாக்க ரூ.60 ஆயிரம் செலவாயிற்று. ஆனால், தொழில் முறையில் உருவாக்கும்போது ரூ.25 ஆயிரம் செலவில் தயாரித்துவிடலாம். சோலார் பைக்கை வாங்குவது தவிர எரிபொருளுக்கென வேறு பணம் செலவழிக்கத் தேவை யில்லை என்பது இதன் சிறப்பம்சம்” என்று கூறு ம் கார்த்திக் இந்த பைக்கினை உருவாக்க உதவிய நண்பர் ஹரி, மெக் கானிக் முத்து ஆகியோருக்கு நன்றி கூறுகிறார்.

அடுத்தகட்டமாக, முற்றிலும் சோலார் மூலம் இயக்கும் வகையிலான ஆட்டோ மற்றும் கார்களை வடிவமைக்கத் திட்டமிட்டிருக்கிறார் இந்த இளம் விஞ்ஞானி.அதற்காக ஸ்பான்சர்’ கிடைத்தால் நிச்சயம் சாதிப்போம் என்றனர்.

இவர்களை 72001 41686, 91506 10003 என்ற கைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தகவல் ::Nagoorkani Kader Mohideen Basha

error: Content is protected !!