சோசியல் மீடியா மூலம் கிடைக்கும் வருவானத்துக்கும் வரி! – புது விதி அமல்

சோசியல் மீடியா மூலம் கிடைக்கும் வருவானத்துக்கும் வரி! – புது விதி அமல்

மீப காலமாக சமூக வலைத்தளங்களில் பலரும் லட்சக்கணக்கில் சம்பாதிக்க தொடங்கி விட்ட நிலையில் அவ்வாறு வருமானம் ஈட்டுபவர்கள் முறையாக வரி செலுத்துகிறார்களா என்ற கண்காணிப்பு தேவைப்படும் ஒரு சூழல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் இன்ஃப்ளூயன்ஸர்கள் என்று கூறப்படும் நபர்கள் ஈட்டும் பணத்துக்கு இனி டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும் என்ற அறிவிப்பை வருமான வரி துறை வெளியிட்டுள்ளது.

சமூக வலைத்தளத்தில் ஆயிரக்கணக்கான அல்லது லட்சக்கணக்கில் ஃபாலோவர்கள் இருப்பவர்கள் ஏதேனும் ஒரு பொருளை அல்லது சேவையை விளம்பரம் செய்யும் பொழுது அதை பார்த்து பலரும் அந்த பொருளை வாங்குவார்கள். அதற்கு கணிசமான ஒரு தொகையும் இலவசமாக பொருளும் வழங்கப்படும். அந்தத் தொகையை இதுவரை வருமான வரியில் சேர்க்காமலேயே கணக்கில் காட்டாமலேயே வந்திருக்கலாம்.சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்ஸ் என்பது மார்கெட்டிங் சம்பந்தப்பட்ட ஒரு துறையாகவே மாறிவிட்டது.

உதாரணமாக, சமூக வலைத்தளத்தில் பிரபலம் ஒருவர், ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள ஒரு ஸ்மார்ட்ஃபோனை தனது சோஷியல் மீடியாவில் விளம்பப்படுத்துகிறார். அதைப் பார்த்து பலரும் வாங்குவார்கள். விளம்பரப்படுத்திய போனை அவரே வைத்துக்கொண்டால், போனின் மதிப்பு வருமானமாக கருதப்பட்டு, அதில் 10% தொகையை வருமான வரியாக செலுத்த வேண்டும்.

இதுவே, 17,000 மதிப்புள்ள காஸ்மெட்டிக் நிறுவனத்தின் பொருட்களை அவர் புரோமோட் செய்தால், அதற்கு TDS பிடித்தம் செய்யப்படாது. ஒரு முறை புரோமோட் செய்யப்படும் பொருளின் / சேவையின் விலை ரூ. 20,000 மேல் இருந்தால் TDS பிடித்தம் செய்ய வேண்டும். ஏற்கனவே, அமலில் இருக்கும் TDS விதிகள் இனி சமூக வலைத்தள இன்ஃப்ளூயன்சர்களுக்கும் பொருந்தும்.

error: Content is protected !!