சேலம் திரும்பிய நடராஜனுக்கு மேள தாளத்துடன் சாரட் வண்டி மரியாதை!- விடியோ!

சேலம் திரும்பிய நடராஜனுக்கு மேள தாளத்துடன் சாரட் வண்டி மரியாதை!- விடியோ!

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஒருநாள், டி-20, டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. டி-20 மற்றும் டெஸ்ட் தொடரை இந்திய அணி அதிரடியாக கைப்பற்றியது. இதில் தமிழக வீரரான யாக்கர் மன்னன் நடராஜன், முக்கிய பங்கு வகித்தார்.

ஒருநாள், டி-20, டெஸ்ட் என மூன்று தொடர்களிலும் கலந்துகொண்டு, முதல் போட்டியிலே தனது அற்புதமான பந்துவீச்சால் விக்கெட்களை வீழ்த்தியதால், இந்தியர்கள் மட்டுமின்றி, உலகளவில் இவரைப்பற்றி அதிகளவில் பேசப்பட்டது. இந்தநிலையில், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு தாய் நாடு திரும்பிய நடராஜனை சின்னப்பம் பட்டியை சேர்ந்த மக்கள், மேளதாளத்துடன் அவரை சாரட் வண்டியில் ஆரவாரமாக அழைத்து வரப்பட்டார்.

முன்னதாக நடராஜனை வரவேற்க ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அங்கு திரண்டனர். அதன்படி அவரை பாராட்டும் வகையில் மேடை அமைக்கப்பட்டது. சாரட் வண்டி கொண்டுவரப்பட்டு மேளதாளங்களுடன் அவர் ஊருக்குள் வந்தார். இருப்பினும் அவருக்கு போடப்பட்ட மேடையை ஊராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அகற்றினர். – ஏனெனில் வெளிநாடு இருந்து நாடு திரும்பிய நடராஜனை இது போன்ற பொது இடங்களில் மக்கள் கூடும் இடங்களில் சந்திக்க கூடாது எனவும் கொரோனா பரிசோதனையை நடராஜன் செய்துகொண்டதால் தனிமைப்படுத்திக் கொள்வதற்காக அவரை 14 நாட்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். இருப்பினும் ஊர் மக்கள் அவரை ஊர்வலமாக அழைத்து வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஆனால் நடராஜன் பங்கேற்ற இந்த அழைப்பு விழாவில் யாரும் நடராஜனிடம் கை கொடுக்கவும் கட்டியணைக்கும் கூடாது எனவும் கண்டிப்பான உத்தரவு போடப்பட்டு இருந்தது. மக்களின் சிறப்பான வரவேற்பினை பெற்ற நடராஜன் சுகாதாரத்துறை அதிகாரிகளின் வேண்டுகோளுக் கிணங்க தற்போது 14 நாட்கள் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

error: Content is protected !!