செல்போன் வாயிலாக இணையதளத்தை பயன்படுத்துவதில் இந்தியா முதலிடம

செல்போன் வாயிலாக இணையதளத்தை பயன்படுத்துவதில் இந்தியா முதலிடம

இந்தியாவில் செல்போன் வாயிலாக இணையதளம் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு அதிகரித்து வருவதே இதற்கு காரணமாகும். இளைஞர்களை அதிகளவில் செல்போனில் இணையதளத்தை பயன்படுத்துகின்றனர். மேலும் அவர்களிடம் விலை உயர்ந்த மற்றும் நவீன வசதிகள் கொண்ட செல்போனை பயன்படுத்துகின்றனர்.அதிலும் பலரும் டி வி நிகழ்சசிகள் உள்பட சினிமாக்களையே செல்போனில் பார்த்து விடுகிறார்கள்
16 - vanikam cellphone
நாட்டின் மொத்த இணையதளம் பயன்படுத்துவோரில் ஐம்பது சதவீதத்தினர் செல்போன் வாயிலாக இணையதளத்தை பயன்படுத்துகின்றனர். இது சர்வதேச அளவில் வளர்ந்த நாடுகளில் 20 முதல் 25 சதவீதமாக உள்ளது என நிதி ஆலோசனை நிறுவனமான அவந்தஸ் கேப்பிட்டல் தெரிவித்துள்ளது. ஆக, செல்போன் வாயிலாக இணையதளத்தை அதிகம் பயன்படுத்துவதில் உலக அளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

இதற்கிடையில் செல்போன் வாயிலான விளம்பர வருவாய் தற்போது ரூ.180 கோடியாக உள்ளது. இது 2016 ஆண்டிற்குள் ரூ.2,800 கோடியாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நுகர்பொருள் துறையை சேர்ந்த நிறுவனங்கள் அதிக அளவில் விளம்பரம் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனவாம்.

error: Content is protected !!