செல்போனில் பேசியபடி பைக், கார் ஓட்டினால் லைசென்ஸ் ரத்து! – டிராபிக் போலீஸ் வார்னிங்!

செல்போனில் பேசியபடி பைக், கார் ஓட்டினால் லைசென்ஸ் ரத்து! – டிராபிக் போலீஸ் வார்னிங்!

‘கார் அல்லது பைக் ஓட்டும்போது செல்போனில் பேசி சென்றாலோ அல்லது ஹெட்போனில் பாட்டு கேட்டு சென்றாலோ, அவர்களின் டிரைவிங் லைசென்ஸ் ரத்து செய்ய பரிந்துரைக்கப்படும்’’ என்று போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் நடைபெறும் பெரும்பாலான விபத்துகளுக்கு செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுவதுதான் காரணம் என்பது போலீசாரின் ஆவணங்களில் இருந்து தெரியவந்துள்ளது. எனவே செல்போன் பேசிக்கொண்டோ, ஹெட்போனில் பாட்டு கேட்டுக்கொண்டோ வாகனம் ஓட்டினால் லைசென்ஸை ரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
jan 25 - cellphone drive
இது குறித்து போக்குவரத்து ஆணையர் பிரபாகர் ராவ் கூறும்போது, ‘‘இந்திய மோட்டார் வாகன சட்டம் விதி 21ன் படி செல்போனில் பேசிக்கொண்டே வாகனத்தில் சென்றால் லைசென்ஸ் உடனடியாக ரத்து செய்யப்படும். மேலும், இதை கண்காணி க்கும் பொருட்டு அந்தந்த பகுதியில் உள்ள ஆர்டிஓ தலைமையில் குழு அமைக்கப்பட உள்ளது. வாகனங்களில் செல்லும் போது செல்போனில் பேசி சென்றாலோ, பாட்டு கேட்டாலோ உடனடியாக அவர்களை இக்குழு ஆதாரத்திற்காக புகைப்படம் எடுத்துக்கொள்ளும். இதைதொடர்ந்து அவர்களது லைசென்ஸ் ரத்து செய்யப்படும். இதற்காக தமிழக அரசு சென்னையில் மட்டும் 100 பேரை கூடுதலாக பணியமர்த்துகிறது’’ என்றார்.

மேலும் போக்குவரத்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘போதையில் வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்தினால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கொலை க்கு நிகரான வழக்கு பதியப்பட்டது. அவர்களது லைசென்சும் ரத்து செய்யப்பட்டது. தற்போது, கார் மற்றும் பைக் ஓட்டி செல்லும்போது செல்போனில் பேசி சென்றாலோ, ஹெட் செட்டில் பாட்டு கேட்டு சென்றாலோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கடந்தாண்டு 2012ல் மட்டும் செல்போனில் பேசியதாக 21 ஆயிரம் பேர் மீதும், 2013ல் 13,500 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

error: Content is protected !!