சென்னை, புறநகர் பகுதிகளிலும் டிச.2 முதல் மின்வெட்டு – அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை, புறநகர் பகுதிகளிலும் டிச.2 முதல் மின்வெட்டு – அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வருகிற 2ம் தேதி முதல் தினசரி 2 மணிநேரம் மின்தடை செய்யப்படும் என தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்தது. மின்பழுது மற்றும் பராமரிப்பு காரணமாக இந்த மின்தடை இருக்கும் என்று கூறியுள்ளது. அதன்படி, காலை 8 மணி முதல் மாலை 6 வரை சுழற்சி அடிப்படையில் சென்னை யில் மீண்டும் மின் வெட்டு அமலுக்கு வருகிறது.
nov 30 -power-cut-in-tamilnadu.
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கடும் மின்வெட்டு நிலவி வருகிறது. இதையடுத்து சென்னையில் 2 மணி நேரமும், மற்ற மாவட்டங்களில் 3 மணிநேரமும் அறிவிக்கப்பட்ட மின்வெட்டு நடைமுறை யில் இருந்தது. ஆனாலும், கடந்த ஏப்ரல், மே கோடைகாலங்களில் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் 8 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை மின்வெட்டு ஏற்பட்டது.

இதனால், தமிழகத்தில் தொழிற்சாலைகள், விவ சாயம் பாதிப்பு அடைந்தன. இந்நிலையில் கடந்த ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் காற்றாலைகள் மூலம் அதிகளவு மின்சாரம் கிடைத்தது. தமிழகத்திற்கு தேவையான மின்சாரம் கிடைத்ததால் அறி விக்கப்பட்ட மின்தடை படிப்படியாக குறைக்கப்பட்டது. சென்னையில் கடந்த 3 மாதங்களாக மின் தடையே இல்லாமல் சீராக மின்சாரம் வழங்கப்பட்டது. அதே போல் மற்ற மாவட்டங்களுக்கும் இரவு நேரங்களில் மின்தடை செய்யப்படவில்லை.

இதனால், சிறு, குறு தொழிலாளர்களும் ஓரளவு மின்தடை இல்லாமல் நிம்மதியுடன் தொழில்களை செய்து வந்தனர். மின் உற்பத்தி பற்றி தமிழக சட்டபேரவையில் முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் பேசும் போது, ‘‘தமிழகத்தில் தற்போது 99 சதவீதம் மின்சாரம், தட்டுப்பாடு இல்லாமல் பொதுமக்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படுகிறது.

மீதமுள்ள 1 சதவீத பற்றாக்குறையும் விரைவில் சரி செய்யப்பட்டு 2014ம் ஆண்டு முதல் தமிழகம் மின் மிகை மாநிலமாக திகழும்’’ என்று கூறினார். இந்நிலையில், கடந்த 3 வாரங்களாக தமிழகத்தில் மீண்டும் மிகப்பெரிய மின்வெட்டு பிரச்னை ஏற்பட் டது. சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் 8 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை அறிவிக்கப்படாத மின்தடை ஏற்பட்டது. மேலும் சென்னை, புறநகர் பகுதிகளில் மீண்டும் 2 மணி நேர மின்வெட்டு, 2ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

error: Content is protected !!