கற்பழிப்பை வரவேற்கலாம் என்ற சி.பி.ஐ. இயக்குனர் மன்னிப்பு கோரினார்

கற்பழிப்பை வரவேற்கலாம்  என்ற சி.பி.ஐ. இயக்குனர் மன்னிப்பு கோரினார்

டெல்லியில் சி.பி.ஐ.யின் பொன் விழா மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்சித் சின்கா சூதாட்டம், கற்பழிப்பு, லாட்டரி மற்றும் கேளிக்கைகள் பற்றி பேசுகையில், “நீங்கள் பாலியல் பலாத்காரத்தை தடுத்து நிறுத்தாவிட்டால் அதனை நீங்கள் விரும்பி வரவேற்பதாக அர்த்தம்.இதில் முறைகேடுகளை தடுக்க சூதாட்டத்தை சட்டபூர்வமாக்க வேண்டும்.” என்றார்.இது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள சிங்கா, செய்தியாளர்களிடம் தமது கருத்து தொடர்பாக வருத்தம் தெரிவித்தார். தாம் தெரிவித்த கருத்து யாரையாவது புண்படுத்தியிருந்தால் அதற்கு வருந்துவதாகவும் அவர் கூறினார்.
nov 13 - c b i singh
தொடர்ந்து அவர் பேசும்போவது,”சூதாட்டங்கள் பாலியல் பலாத்காரம் போன்றது. அதனை நீங்கள் தடுத்து நிறுத்தாவிட்டால் அதனை அனுபவித்து மகிழுங்கள். பல்வேறு மாநிலங்களில் லாட்டரிகள், விடுமுறை கால கேளிக்கை விடுதிகள், சூதாட்ட கிளப்புகள் செயல்படுகின்றன. இதன் மூலம் கறுப்பு பண நடமாட்டத்தை நாமாகவே அனுமதிக்கிறோம்.இவற்றை தடுத்து நிறுத்தாவிட்டால் அவை நாடு முழுவதும் பரவி விடும்.விளையாட்டுப் போட்டிகளில் மேட்ச் பிக்சிங் மற்றும் சூதாட்டம் தலை விரித்தாடுகிறது. இதில் முறைகேடுகளை தடுக்க சூதாட்டத்தை சட்டபூர்வமாக்க வேண்டும்.”என்று அவர் பேசினார்.

இப்படி பேசிய அவரது பேச்சு தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் குற்றம் பற்றிய அவரது கருத்துக்கு மகளிர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தேசிய மகளிர் அமைப்பு சார்பில் விளக்கம் கேட்டு ரஞ்சித் சின்காவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவர் பிருந்தா காரத் கூறுகையில், ரஞ்சித் சின்கா பொறுப்பற்ற முறையில் பேசியிருக்கிறார். எனவே அவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றார்.

முதலாவது பெண் ஐ.பி.எஸ். அதிகாரியான கிரண் பேடி, கூறுகையில், “தனது கருத்துக்கு சின்கா மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார்.

இதே போல சூதாட்டத்தை சட்டபூர்வமாக்க வேண்டும் என்று ரஞ்சித் சின்கா பேசியிருப்பதற்கு, இந்திய கிரிக்கெட் வாரியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதன் ஊழல் தடுப்பு பிரிவு தலைவரான ரவி சவானி கூறுகையில், விளையாட்டுக்களில் பெட்டிங்கை சட்டபூர்வமாக்குவதன் மூலம் முறைகேடுகளை தடுத்து விட முடியாது என்றார்.

இது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள சிங்கா, செய்தியாளர்களிடம் தமது கருத்து தொடர்பாக வருத்தம் தெரிவித்தார். தாம் தெரிவித்த கருத்து யாரையாவது புண்படுத்தியிருந்தால் அதற்கு வருந்துவதாகவும் அவர் கூறினார்.

Legalising betting like ‘enjoying rape’: CBI chief Ranjit Sinha regrets statement after backlash
***************************************************************************
CBI Director Ranjit Sinha today expressed regret for his comments comparing the legalizing of betting in sports to ‘enjoying rape’, after a huge public backlash.
“I regret any hurt caused as same was unintended and inadvertent. I reiterate my deep sense of regard and respect for women and commitment to gender issues,” Mr Sinha said today, stopping short of an apology in his third clarification since the controversy erupted yesterday.

error: Content is protected !!