“சீட்டு வேணுமா? எம்.எல் . ஏ .சீட்?” – அதிமுக தலைமை அறிவிப்பு .

“சீட்டு  வேணுமா? எம்.எல் . ஏ .சீட்?” – அதிமுக தலைமை  அறிவிப்பு  .

தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது.இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் தீவிரமாக செய்து வருகிறது. இதுகுறித்து ஆலோசனை நடத்துவதற்காக தேர்தல் கமிஷன் அதிகாரிகள் இன்னும் சில தினங்களில் சென்னை வர இருக்கிறார்கள். சட்டசபை தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் நாளை (புதன்கிழமை) வெளியிடப்படுகிறது. தமிழக சட்டசபை தேர்தலையொட்டி புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடைபெற இருக்கிறது.
admkparty-office
இந்த நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டசபை தேர்தல்களில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினர் நாளை முதல் விருப்பமனு தாக்கல் செய்யலாம் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா அறிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டமன்ற பேரவை பொதுத் தேர்தல்களில் அ.தி.மு.க.வின் சார்பில் வேட்பாளர் களாக போட்டியிட விரும்புகின்ற அ.தி.மு.க.வினர், தலைமை கழகத்தில் 20-ந் தேதி (நாளை) முதல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 3-ந் தேதி வரை தினமும் காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை உரிய கட்டண தொகையை செலுத்தி விண்ணப்ப படிவங்களை பெற்று, பூர்த்தி செய்து தலைமை கழகத்தில் வழங்கலாம்” இவ்வாறு அந்த அறிக்கையில் ஜெயலலிதா கூறி உள்ளார்.

விண்ணப்ப படிவ கட்டண விவரம் குறித்து அ.தி.மு.க. பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில்,”அ.தி.மு.க. பொதுச்செயலா ளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதாவின் மேலான அறிவிப்புக்கு இணங்க, நடைபெற உள்ள தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்ற பேரவை பொதுத் தேர்தல்களில், அ.தி.மு.க.வின் சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புகின்ற அ.தி.மு.க.வினர், தலைமை கழகத்தில் கீழே நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டண தொகையை செலுத்தி விண்ணப்ப படிவங்களை பெற்றுக் கொள்ளலாம்.

தமிழ்நாடு- ரூ.11 ஆயிரம்.

புதுச்சேரி- ரூ.5 ஆயிரம்.

கேரளா- ரூ.2 ஆயிரம்” இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறி உள்ளார்.

error: Content is protected !!