சின்ன சின்ன விஷயங்கள் மனதுக்கு ஆறுதல்!

சின்ன சின்ன விஷயங்கள் மனதுக்கு ஆறுதல்!

மோடிக்கு ஓட்டு போட்டேலே போய் அவர்கிட்டேயே கேளும் – அரசு அதிகாரியின் திமிர் பேச்சும் – அடுத்த வாரமே ஆப்பும்…என்னடா இவன் கூட தினந்தந்தி மாதிரி எழுத ஆரம்பிச்சிட்டானே நினைக்காதீங்கோய்…. விவரம் அம்புட்டு ஃபாஸ்டா நடந்திருக்கு –
ravi - oct 8
ஆமாம் நிர்மல் ராய் என்ற கவுஹாத்தி நகரில் பாபோர்ட்டுக்கு விண்ணப்பித்து ஒரு வருடம் ஆகியும் கிடைக்காமல் போன காரணம் -கில்மா (லஞ்சம்) கொடுக்காமல் இருந்தது தான். பாஸ்போர்ட் அலுவுலகத்தை விரக்தியுடன் அனுகியபோது அங்கே அஞ்சலி தாஸ் தாக்கூரியா என்பவர் ” மோடிக்கு வோட்டு போட்டே இல்ல – அவர்கிட்டேயே போய் பாஸ் பாஸ்போர்ட் கேளுனுனு” கூற ஆகஸ்ட் 25 ஆம் தேதி நிர்மல் ராய் பிரதம அலுவலகத்துக்கு கடிதம் எழுதுகிறார் – ஆகஸ்ட் 28 ஆம் தேதி பிரதமர் அலுவுலகம் பதில் அனுப்புகிறதூ தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆகஸ்ட் 30ல் வீட்டுக்கு பாஸ்போர்ட் வருகிறது –

அது மட்டுமல்ல அடுத்த ஒரு வாரத்தில் (15 செப்டம்பர்) அதே பாஸ்போர்ட் அரசு அதிகாரி அஞ்சலி தாஸ் தாக்கூரியா லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாய் சிபிஐ கைது செய்கிறது. ஏற்கனவே இமிகிரேஷன் ஆப்பிஸர்ஸ் பன்னும் அட்ராசிட்டியை நேரடியாக அப்போது அமைச்சராய் இருந்த அத்வானிக்கு எழுதி 1 வாரத்தில் சென்னை இமிகிரேஷன் மாற்றம் கணடது பற்றியும் சில வருடங்களுக்கு முன் எழுதியிருந்தேன் – அதனால் இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்கள் மனதுக்கு ஆறுதல் அளிக்கிறது – ஜெய் ஹிந்த்

error: Content is protected !!