சினிமா துறையை காப்பாற்ற ‘தமிழ் திரைப்பட கூட்டமைப்பு’

சினிமா துறையை காப்பாற்ற ‘தமிழ் திரைப்பட கூட்டமைப்பு’

“அதிக வருவாய் ஈட்டக்கூடிய நிலையில் இருந்த தமிழ்ப் படவுலகம், ஏன் இந்த நிலைக்கு ஆளானது? வளமான இந்த தொழில் நலிவடைந்ததற்கு என்ன காரணம் என்று ஆராய்ந்து, சினிமா துறையை காப்பாற்ற ‘தமிழ் திரைப்பட கூட்டமைப்பு’ என்ற அமைப்பை அடுத்த மாதம் தொடங்குகிறோம். இதில் தயாரிப்பாளர் சங்கம், இயக்குனர் சங்கம் உள்பட பல சங்கங்கள் பங்கேற்பார்கள்.”என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் கூறினார்.
cine kayaar 26
ஏழுமலையான் மூவிஸ், நாயகன் சினி ஆர்ட்ஸ் சார்பில் எஸ்.நாயகம், இ.ரமேஷ் தயாரிக்கும் படம் ‘இன்னார்க்கு இன்னாரென்று’. புதுமுகங்கள் சிலம்பரசன், அஞ்சனா, ஸ்டெபி, சந்தானபாரதி, விஜயகிருஷ்ணராஜ் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, சாய் நடராஜ். இசை, வசந்தமணி. இயக்கம், ஆண்டாள் ரமேஷ்.

இதன் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் கேயார் பேசுமபோவது:கடந்த ஆண்டு 162 படங்கள் ரிலீசானது. இந்த ஆண்டு அதிக படங்கள் ரிலீசாகி இருக்கின்றன.சினிமா அசுர வளர்ச்சி பெற்றுள்ளது குறித்து மகிழ்ச்சி. இருந்தாலும், தயாரிப்பாளருக்கு எவ்வளவு வருமானம் திரும்பக் கிடைத்தது என்று யோசிக்கும்போது வருத்தமாக இருக்கிறது. தயாரிப்பாளர் என்பவர் தந்தை மாதிரி. இயக்குனர் தாய் மாதிரி. இதை நடிகர், நடிகைகள் மறக்கக்கூடாது. ரஜினி, இளையராஜா போன்ற சாதனையாளர்கள் இவ்வளவு பெரிய உயரத்துக்கு சென்றதற்கு காரணம், அவர்கள் தங்களை வளர்த்து விட்டவர்களை இப்போதும் மறப்பதில்லை. அதுபோல், தங்களை வைத்து படம் தயாரிப்பவர்களை நடிகர், நடிகைகள் மறக்கக்கூடாது.

அதிக வருவாய் ஈட்டக்கூடிய நிலையில் இருந்த தமிழ்ப் படவுலகம், ஏன் இந்த நிலைக்கு ஆளானது? வளமான இந்த தொழில் நலிவடைந்ததற்கு என்ன காரணம் என்று ஆராய்ந்து, சினிமா துறையை காப்பாற்ற ‘தமிழ் திரைப்பட கூட்டமைப்பு’ என்ற அமைப்பை அடுத்த மாதம் தொடங்குகிறோம். இதில் தயாரிப்பாளர் சங்கம், இயக்குனர் சங்கம் உள்பட பல சங்கங்கள் பங்கேற்பார்கள். அப்போது பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்”.என்று கேயார் தெரிவித்தார்

error: Content is protected !!