சிதம்பரம் :பட்டியலின ஊராட்சி மன்ற தலைவரை தரையில் அமர வைத்த விவகாரம்..!

சிதம்பரம் :பட்டியலின ஊராட்சி மன்ற தலைவரை தரையில் அமர வைத்த விவகாரம்..!

கடலூர் மாவட்டத்தில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த பெண் உள்ளாட்சி பிரதிநிதிகள் சாதி அடிப்படையில் இழிவு செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ள நிலையில் இதுதொடர்பாக ஊராட்சி செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து கடலூர் மாவட்டம் சிதம்பரம் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் லாமேக் கூறுகையில், “கடலூர் மாவட்டம் புவனகிரி தெற்குத் திட்டை ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி தரையில் அமர வைத்து அவமதிப்பு செய்த விவகாரத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஊராட்சி செயலாளர் சிந்துஜா கைது செய்யப்பட்டார்.

அவர் மீது பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடி இனத்தவர் மீதான வன்கொடுமை தடுப்பு திருத்தச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் மோகன்ராஜ் தலைமறைவாகியுள்ள நிலையில், அவரை தேடும் பணியில் காவல் துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்,” எனத் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!