சாப்பிடும்போதே சாட்/மெயில்/செல்பி எடுக்க உதவும் நவீன ட்ரே!

சாப்பிடும்போதே சாட்/மெயில்/செல்பி எடுக்க உதவும் நவீன ட்ரே!

சாப்பிடும் போது கால் வந்தாலோ அல்லது வாட்சப் மெசேஜ் மற்றும் ஃபேஸ்புக்கில் தகவல் அனுப்ப வேண்டுமெனில் ஒன்று கையை கழுவி விட்டு செய்ய வேண்டும் அல்லது அந்த குழம்பு / எச்சப் கையோடு டைப்ப வேண்டும் என்ற நிலை மாறுகிறது. இதை முதன் முதலில் அறிமுகம் செய்யும் நிறுவனங்கள் – மெக்டொனால்ட்ஸ் மற்றும் கேஎஃப்சி நிறுவனங்கள் தான்.
ravi 29
இந்த நிறுவனங்கள் உங்கள் ஆர்டரை ஒரு தட்டில் வைத்து தருவார்கள் அல்லவா இனிமே இந்த தட்டில் ஒரு கீபோர்ட் இருக்கும் அது உங்களுடைய மொபைல் மற்றும் டேப்ளட்டில் ப்ளூடூத் மூலம் இனைந்து நீங்கள் சாப்பிட்ட படியே சேட் செய்யலாம் மற்றூம் மெயில் டைப் செய்யலாம் போன்ற பல விஷயங்களை செய்ய முடியும்.

கெட்சப் கொட்டினாலும் சாப்ப்பாடு சிந்தினாலும் கவலை இல்லை இவ்வகை எலக்ட்ரானிக் தட்டுகளை திரும்பவும் துடைக்கவோ அல்லது கழுவவோ முடியும் என்பதில் மாற்று கருத்தில்லை. இவ்வகை ட்ரேக்கள் மூலம் நீங்கள் விரும்பிய இடத்தில் இருந்து இயக்க முடியும் என்பதால் இனிமெல் மொபைல் அழுக்காகும் மற்றூம் தண்ணீர் படும் என்ற கவலை தேவையில்லை.

இதை சுருட்டி கூடவைக்கும் அளவுக்கு இலகுவான பிளாஸ்டிக் மூலம் செய்யப்பட்டதால் இன்னும் ஈஸி…………..சாப்பிட்டுகிட்டு இருக்கேன் ஒரு பத்து நிமிஷம் தாங்க கூப்பிடுறேன்னு சொல்ற அந்த 10 நிமிஷ எக்ஸ்கியூஸ் இனிமே வேலை செய்யாதா – சரியா தீயா வேலை செய்யுங்க குமாரிகள் மற்றும் குமார்களே….

Surf / Mail / Chat / Click Selfie or do anything while eating …………..

error: Content is protected !!