சாட்டை பட நாயகன் நடிக்கும் ‘ஜாக்கி’ ஆல்பம்!
சாய் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக L.லாரன்ஸ் ,M.தன்ராஜ் ,C.V.தங்கவேல் K.L.சூர்யகுமார் ,நிப்பான்ஸ்பிரபாகர் ஆகியோர் இணைத்து தயாரிக்கும் படத்திற்கு “ஜாக்கி” என்று பெயரிட்டுள்ளனர்.யுவன் கதாநாயகனாக நடிக்கிறார் கதாநாயகியாக தர்ஷிதா நடிக்கிறார் கதை,திரைக்கதை,வசனம் எழுதி இயக்குகிறார் கோவை ரவிராஜன்.படம் பற்றி இவரிடடம் கேட்டபோது,”கிராமத்தில் செய்த சின்ன தவறுகள் ஜாக்கியை திசை திருப்பியதால் வேலை தேடி சென்னைக்கு வருகிறான் வந்த இடத்தில் பெரிய தவறுகளை செய்து சூழ்நிலை கைதியாகிறான் அதிலிருந்து அவன் விடுபட்டானா? அவனுக்கு என்ன ஆனது? என்று அதிரடி ஆக்ஷன் கதையை காதல் மோதலுடன் சொல்லி இருக்கிறோம்.
நடிகை நளினி இந்த படத்தில் ஒரே ஒரு பாடல் காட்சியில் நடித்திருக்கிறார் ..வளைகாப்பு விழாப்பாடலில் நளினி நடனமாடி இருக்கிறார் நீண்ட வருடங்களுக்கு பிறகு நான் நடனமாடி இருக்கிறேன் என்று பெருமையுடன் கூறினார்” என்கிறார் இயக்குனர் கோவைரவிராஜன்.