சபரிமலை ஐயப்பன் கோயில் அப்டேட் விவரங்கள அறிய புதிய ஆப்ஸ்!

சபரிமலை ஐயப்பன் கோயில் அப்டேட் விவரங்கள அறிய  புதிய ஆப்ஸ்!

சபரிமலை கோயிலில் பூஜை நேரம், தங்குமிட வசதிகள் உள்ளிட்டவற்றை பக்தர்கள் தெரிந்து கொள்ள வசதியாக தேவசம் போர்டு மற்றும் போக்குவரத்து துறை சார்பில் புதிய மொபைல் அப்ளிகேஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இந்த ஆப்ஸ் மூலம் பூஜை நேரங்கள், பூஜை கட்டணங்கள், மருத்துவமனைகள், தங்குமிடம், போலீஸ் உட்பட விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
apps abarimalai
சபரிமலை ஐயப்பன் கோயிலில் தற்போது மண்டல கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சபரிமலையில் குவிந்த வண்ணம் உள்ளனர். சபரிமலை வரும் பக்தர்களுக்காக திருவிதாங்கூர் தேவசம் போர்டு, கேரள அரசின் காவல் துறை, போக்குவரத்து துறை உட்பட பல்வேறு துறைகள் சிறப்பு வசதிகளை செய்து வருகின்றன.

இந்நிலையில் பக்தர்களின் வசதிக்காக புதிய செல்போன் அப்ளிகேஷன் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கேரள போக்குவரத்து துறையும், திருவிதாங்கூர் தேவசம் போர்டும் 2 செல்போன் அப்ளிகேஷன்களை அறிமுகப்படுத்தியுள்ளன. இதன்படி பக்தர்கள் தங்களது ஆன்ட்ராய்டு போனில் ‘தத்வமசி‘ என்ற போக்குவரத்து துறையின் ஆப்சை இலவசமாக பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இதை பயன்படுத்தி, சபரிமலை ஐயப்பன் கோயில் பூஜை நேரங்கள், வாகனங்கள் பழுதானால் பராமரிப்பு பணிக்கு யாரை அணுகுவது, ஓய்வறைகள் குறித்த விவரங்கள், ஓட்டல்கள், பெட்ரோல் பங்குகள், மருத்துவமனைகள், தீயணைப்பு நிலையங்கள், போலீஸ், ரயில்வே ஸ்டேஷன்கள், கேரள அரசு போக்குவரத்துக் கழகம், அரசு விருந்தினர் இல்லங்கள், வனத்துறை அலுவலகங்கள், பஸ், ரயில் நேரம், வாகனங்கள் நிறுத்துமிடம், ரூட் மேப் ஆகியவை குறித்து தெரிந்து கொள்ளலாம். திருவிதாங்கூர் தேவசம் போர்டின் ‘சபரிமலா அபீஷியல்‘ என்ற செல்போன் ஆப்ஸில் பூஜை நேரங்கள், பூஜை கட்டணங்கள், மருத்துவமனைகள், தங்குமிடம், போலீஸ் உட்பட விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

error: Content is protected !!