“சங்கராபரணம்” ரீ-ரிலீஸ் இப்போது சினிமாஸ்கோப்பில்!

“சங்கராபரணம்” ரீ-ரிலீஸ் இப்போது சினிமாஸ்கோப்பில்!

சுமார் 35 வருடங்களுக்கு முன் தெலுங்கில் வெளியாகி வெற்றிபெற்றத்துடன் தமிழ்நாட்டிலும் அதே பெயரில் தெலுங்கு படமாக வெளியாகி சூப்பர்ஹிட் ஆன படம் “சங்கராபரணம்”ஒரே நேரடி தெலுங்கு படம் தமிழ்நாட்டில் அள்ளிக் குவித்த வசூல் இந்திய திரையுலகையே திரும்பிப்பார்க்க வைத்தது.

பரத நாட்டியத்தையும் – இசையையும் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட கதையில் வெட்டுக் குத்து,ஆபாசம் வன்முறை என கமர்ஷியல் வகையறா எதுவுமில்லாமல் உணர்வுகளை தட்டி எழுப்பி படம் பார்ப்பவர்கள் அனைவரையும் அழ வைத்தது. அதுவும் மொழி புரியாதவர்களையும் கூட என்பது இன்னொரு விசேஷம்.

35 வருடங்களுக்கு பிறகு சங்கராபரணம் தமிழில் மொழி மாற்றம் செய்யப்படுகிறது. அத்துடன் 35 mm.. சினிமாஸ்கோப் ஆகவும்,DTS மற்றும் டிஜிட்டல் என இன்றைய நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு சங்கராபரணம் உருவாகிக் கொண்டிருக்கிறது.
இந்த படத்தின் பாடல்களை கேட்க க்ளிக்:http://www.youtube.com/watch?v=JpGSPvWzHmc&list=RDiZACVIMSbOM

error: Content is protected !!