கோலிவுட் செய்திகளைப் புறக்கணிக்க இன்டர்நெட் செய்தியாளர்கள் முடிவு!

கோலிவுட் செய்திகளைப் புறக்கணிக்க இன்டர்நெட் செய்தியாளர்கள் முடிவு!

தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கம் இரண்டுப் பட்டு இருக்கும் நிலையில் வழக்கும் போல் ஒரு குரூப் மூலம் தேனீக் கூட்டை கிளறி விட்டுள்ளனர். ஆம்..அவ்வப்போது இணையதள பத்திரிகையாளர்களை இனி எந்த சினிமா நிகழ்ச்சிகளுக்கும் அழைக்கவே கூடாது என முடிவெடுத்து பின்னர் கமுக்கமாக அவர்களை அழைப்பதும் வாடிக்கையாக இருந்து வரும் நிலையில் வழக்கம்.அது போல் நேற்று திடீரென தமிழ் சினிமா பிஆர்ஓக்களை அழைத்த பவர் இல்லாத தயாரிப்பாளர் சங்கம் ”இனி எந்த இணைய தளப் பத்திரிகையாளர்களையும் சினிமா நிகழ்ச்சிகளுக்கு அழைக்கக் கூடாது. தேர்ந்தெடுக்கப்பட்ட 45 அச்சுப் பத்திரிகையாளர்களை அழைத்தால் மட்டும் போதும்” என்று வாய்மொழியாக உத்தரவிட்டு, அந்த 45 அச்சு இதழ்களின் பெயர்களையும் குறித்துக் கொடுத்துள்ளனராம்.
boycott 1
இதையடுத்து .இந்தப் பிரச்சினை குறித்து கலந்து பேசவும் முக்கிய முடிவு எடுக்கவும் இன்று 21-09-2014 ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கு ஆர்கேவி ஸ்டுடியோவில் சினிமா இணையதள பத்திரிகையாளர் கூடி ஆலோசனை நடத்தினர்.அதில் பலரும் பலவிதக் கருத்துகளை பேசிய பின்னர் இறுதியில் ,”இண்டர் நெட் செய்தியாளர்கள் இந்த கோலிவுட் நிகழச்சிகளைப் புறக்கணிப்பது” என்று முடிவெடுத்துள்ளார்கள்.

மேலும் இப்போதைக்கு கோலிவுட்டில் எந்த சினிமாவையும் பாராட்டிக் கட்டுரைகள் எழுதக்கூடாது என்றும் அதே சமயம் அடுத்தடுத்து இவர்களின் கோல்மால் செய்திகளை மட்டுமே பிரதானப் படுத்தி செய்தி வழங்க வேண்டும் என்றும் தீர்மானித்துள்ளார்கள். அத்துடன் தங்கள் முடிவை முறைப்படி தயாரிப்பாளர் சங்கள் உள்ளிட்ட அத்தனை யூனியன்களுக்கும் அனுப்பி வருகிறார்கள்.

அது குறித்த விவரமிதோ :::
* பெரும்பான்மை ஊடகங்களை தடுத்தும் இணைய பத்திரிக்கைகளை முழுமையான புறக்கணித்து அவமானப்படுத்தியும் ஊடகக் குடும்பத்தில் வஞ்சகமான பிரிவினையை ஏற்படுத்துவதற்காக நரித் தந்திர வேலைகள் செய்கிற —தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், , தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம் ,தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் ஆகிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் உருவாக்கி இருக்கிற தமிழ் திரைப்பட பாதுகாப்பு படைக்கு தமிழ் திரைப்பட ஊடகவியாலாளர்கள் சம்மேளனம் சார்பில் வலுவான கண்டனம் தெரிவிக்கிறோம்.

*இதற்கு காரணமாக இருந்த தயாரிப்பாளர் சங்கத்தைச் சேர்ந்த டி.சிவா, டி.ஜி.தியாகராஜன் , எல்எல்எம் முரளிதரன், ஏ.எல் அழகப்பன், இயக்குனர் சங்கத்தைச் சேர்ந்த விக்ரமன், ஆர்.கே. செல்வமணி, வி.சேகர், நடிகர் சங்கத்தைச் சேர்ந்த ஆர்.சரத்குமார், ,ராதா ரவி ,தொழிலாளர் சம்மேளனத்தை சேர்ந்த சிவா ஆகியோர் சம்மந்தப்பட்ட எந்த நேர்மறைச் செய்திகளையும் அவர்களுக்கு ஆதரவான செய்திகளையும் இனி வரும் காலங்களில் பரப்புவது இல்லை என்று ஏக மனதாக முடிவெடுக்கிறோம்.

^ தமிழ் இன உணர்வோடு புலிப் பார்வை படத்தை எதிர்த்த ஒரே காரணத்துக்காக மனதில் வஞ்சம் கொண்டு , ஒட்டுமொத்த இணைய தளங்களையும் முடக்க நினைத்ததோடு மற்ற ஊடகங்களையும் சிறுமைப்படுத்தும் இந்த பிரிவினை சூழ்ச்சிக்கு முழு முதற்காரணமாக இருந்த ராஜபக்சேவின் நண்பர் மற்றும் ஏஜன்ட்டான அம்மா கிரியேசன்ஸ் டி.சிவா ,மற்றும் அவர் இப்போது பணி புரியும் வேந்தர் மூவீஸ் சம்மந்தப்பட்ட படங்கள் பற்றிய எந்த நேர்மறைச் செய்திகளையும் ஆதரவான செய்திகளையும் இனி எக்காலத்திலும் பிரசுரிப்பது இல்லை என்று ஏக மனதாக முடிவெடுக்கிறோம்.

* தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தை சேர்ந்த சிவா ,அகில இந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது மகிழ்ச்சியடைந்ததற்கு இப்போது வருத்தப்படுகிறோம்.ஊடகவியலாளர்களை அவமானப் படுத்தும் கேவலமான செயலுக்கு துணை போன இந்த சிவாவுக்கு, அகில இந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் பதவி வகிக்க அருகதை இல்லை என்பதால் , உடனே அவரது பதவியை பறிக்க வேண்டும் என்று, அகில இந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்துக்கு தனிப்பட்ட விதத்தில் அழுத்தம் கொடுக்கும் பணிகளை செய்ய இருக்கிறோம்.

* பத்திரிக்கையாளர்களுக்கு நடந்திருக்கும் அவமானம் குறித்து பிரஸ் கிளப்புக்கு முறைப்படி தெரிவிக்க இருக்கிறோம்.

* இன்றைய தினத்தில் இருந்து ஒரு மாத காலத்துக்கு திரைப்படம் சம்மந்தமான அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒட்டு மொத்தமாக புறக்கணிக்கிறோம் .

* மேற்படி அரைவேக்காட்டுத்தனமான தமிழ் சினிமா பாதுகாப்புப் படையின் அனுமதிப் பட்டியலில் இருக்கும் ஊடகவியாள நண்பர்கள், இதை ஒட்டுமொத்த ஊடகவியலாள சமூகத்துக்கும் ஏற்பட்ட அவமானமாக கருதி, இந்த தீர்மானங்களுக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் தருமாறு நட்புரிமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

* புறக்கணிக்கப்பட்ட ஊடகங்களில் பணியாற்றும் ஊடகவியலாள நண்பர்கள், தங்கள் பணியாற்றும் நிறுவனங்களுக்கு நிலைமையை உணர்த்தி, நமது நியாயமான புறக்கணிப்புக்கு துணை இருக்கும்படி கேட்டுக் கொள்ள வேண்டுகிறோம்.

இது குறித்த செயல்பாடுகளுக்கும், எதிர்கால திட்டமிடல் குறித்து ஊடகவியலாளர்களை ஒருங்கிணைக்கவும் திரு ஒன் இண்டியா சங்கர் , திரு. தேனி கண்ணன், திரு.வின்சென்ட், திரு ரமேஷ்குமார், திரு சுரேஷ் ஆகியோரை க் கொண்ட ஒருங்கிணைப்பாளர்ளின் குழு அமைக்கப்பட்டுள்ளது.

* மேற்படி தீர்மானங்களுக்கு எல்லோரும் ஒருமித்து ஒட்டுமொத்த ஆதரவை வழங்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்
மேற்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டு உடனடியாக அமலுக்கு வந்தன .

error: Content is protected !!