கோலிவுட் அப்டேட் லாப நஷ்ட கணக்கு!

கோலிவுட் அப்டேட் லாப நஷ்ட கணக்கு!

கிட்ட தட்ட 200 திரைப்படங்கள் 2014ம் வருட வெளியீட்டு கணக்கில்….. லிங்கா வரும் டிசம்பர் மாதம் கூட 9 முக்கிய திரைப்படங்கள் திரைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது. லிங்கா … பிசாசு … கயல் …இசை …. வெள்ளகார துரை … எனக்குள் ஒருவன் .. கப்பல் ..மீகாமன்… வாலிப ராஜா,அனேகன் … காக்கி சட்டை … என்னை அறிந்தால் .. ஆம்பள ….ஐ …..என முக்கிய படங்கள் பொங்கலுக்கு வர தயார் நிலையில்..!
cine dec 4
இது தவிர வை ராஜா வை ராஜா … இடம் பொருள் ஏவல் …நம்பியார் … என பல படங்கள் அடுத்தடுத்து எப்போது ரிலீஸ் என தெரியாமல் ஆனால் தயார் நிலையில் ..

இதெல்லாம் சரி 2014 ல் வெளி வந்த 200 படங்களில் வெற்றி பெற்ற படங்கள் என்ன என்ன ?

எல்லோருக்கும் லாபம் … எல்லோருக்கும் என்றால் தயாரித்தவர் … வினியோகம் செய்தவர் .. திரை அரங்கு உரிமையாளர்கள் … என எல்லா தரப்பினருக்கும் வெற்றி …மற்றும் லாபம் தந்த படங்கள் ……. 1. கோலி சோடா 2தெகிடி 3.யாமிருக்க பயமே 4. சதுரங்க வேட்டை 5 கதை திரைக் கதை வசனம் இயக்கம் 6.மஞ்சப்பை 7. வேலை இல்லா பட்டதாரி 8. அரண்மனை 9 முண்டாசுப் பட்டி 10 மான் கரத்தே

ஆக 10 படங்கள்தான் முழு வெற்றி என சொல்லலாம் ( டிசம்பர் திரைப் படங்களின் முடிவை பிறகு சேர்த்து கொள்ளலாம்)
அடுத்த வரிசை … சுமார் .. ஓகே .. யாரோ சிலருக்காவது லாபம் …

நஷ்டம் ஆனாலும் கூட நல்ல பெயர் பெற்ற படங்கள்……1.குக்கூ 2. வாயை மூடி பேசவும் 3. ஜிகர் தண்டா 4. சலீம் 5.அரிமா நம்பி 6 ஒரு கன்னியும் 3 களவாணிகளும் 7. கோச்சடையான் 8. நாய்கள் ஜாக்கிரதை 9 திருடன் போலீஸ்
10 மெட்றாஸ் 11 என்னமோ நடக்குது 12 நிமிர்ந்து நில் 13.இது கதிர்வேலன் காதல்
14 நான் சிவப்பு மனிதன்

முக்கியமாக சில பெரிய படங்களின் கதை சொல்லியாக வேண்டும் 1. கத்தி நிச்சயம் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் என நம்பத் தகுந்த வட்டாரத் தகவல் . வினியோகஸ்தர்களுக்கும் நஷ்டம் அல்லது அசல் தேர்ச்சி எனவும் தகவல் … திரை அரங்கு உரிமையாளர்களில் மினிமம் கேரண்டி முறையில் திரையிட்ட பலருக்கும் நஷ்டம்தான்…2. பூஜை நிச்சயம் நடிகர் விஷாலுக்கு நஷ்டம்தான் ஆனால் நல்ல தரமான தயாரிப்பாளர் .. திட்டமிட்ட படி தயாரிப்பவர் என நல்ல பெயர் பெற்று தந்த படம் பூஜை 3. யான் செம நஷ்டம் 4. காவிய தலைவன் பெரும் நஷ்டம் 5. வீரம் ஒரு சில வினியோகஸ்தர்களைத் தவிர பலருக்கும் நஷ்டம் தயாரிப்பாளருக்கும் நஷ்டம் என கேள்வி 6 வன்மம் … தயாரிப்பாளருக்கு தாங்க முடியாத நஷ்டம் என ஒரு பேச்சு இருக்கிறது. 7 ஜெய் ஹிந்த் 2 அனைத்து வினியோகஸ்தருக்கும் நஷ்டம்தான் 8 அஞ்சான் முழு நஷ்டத்தையும் தயாரிப்பாளரே தாங்கிய படம்

மேலே சொன்ன 30 படங்களைத் தவிர நவம்பர் வரை வெளி வந்த 184 படங்களில் 154 படங்கள் 60 முதல் 100 சதவிகித நஷ்டம்தான் … எப்படி இருக்கு?

Venkat Subha

error: Content is protected !!