கோடீஸ்வரர்கள் 442; குற்றப் பின்னணி கொண்டவர்கள் 186 – புது எம்.பி,கள் பிராகரஸ் ரிப்போர்ட்

கோடீஸ்வரர்கள் 442; குற்றப் பின்னணி கொண்டவர்கள் 186 – புது எம்.பி,கள் பிராகரஸ் ரிப்போர்ட்

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள வேட்பாளர்களில் 442 பேர் கோடீஸ்வரர்கள் என்பதும், 186 பேர் குற்றப் பின்னணி கொண்டவர் என்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதிலும் குற்றப் பின்னணி: மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள வேட்பாளர்களில் 186 பேர், அதாவது 34 சதவீதத்தினர் குற்றப் பின்னணி கொண்டவர்கள். இவர்களில் 112 பேர், கொலை, கற்பழிப்பு, ஆள்கடத்தல் போன்ற கடுமையான குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்று தெரிய வருகிறது..
edit--politician-criminal
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் கல்வித் தகுதி, குற்றப் பின்னணி, சொத்து விவரம் உள்ளிட்டவை குறித்து தேசிய தேர்தல் கண்காணிப்பு மற்றும் ஜனநாயக சீர்திருத்த அமைப்பு ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது: அதன்படி கோடீஸ்வர எம்.பி.க்கள்: தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்களில் மொத்தம் 442 பேர், தாவது 82 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள். இவர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.14.61 கோடி. தெலுங்கு தேசம், சமாஜவாதி, சிரோன்மணி அகாலி தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் அனைத்து வேட்பாளர்களும் கோடீஸ்வரர்களாக உள்ளனர்.

கோடீஸ்வரர்களின் சதவீத விவரம்: சிவசேனா – 94%, பாஜக – 84%, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி – 82%, தேசியவாத காங்கிரஸ் – 80%, காங்கிரஸ் – 80%, ஆம் ஆத்மி -75%, திரிணாமுல் காங்கிரஸ் -62% மற்றும் மார்.

குற்றப் பின்னணி: மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள வேட்பாளர்களில் 186 பேர், அதாவது 34 சதவீதத்தினர் குற்றப் பின்னணி கொண்டவர்கள். இவர்களில் 112 பேர், கொலை, கற்பழிப்பு, ஆள்கடத்தல் போன்ற கடுமையான குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – 33 சதவீதத்தினர் கோடீஸ்வரர்கள்.

error: Content is protected !!