கொடிய குற்றங்களில் ஈடுபடுகிற 16 வயதினருக்கும் கடும் தண்டனை

கொடிய குற்றங்களில் ஈடுபடுகிற 16 வயதினருக்கும் கடும் தண்டனை

டெல்லியில் ஓடும் பஸ்சில் ‘நிர்பயா’ (ஜோதி சிங்) என்ற துணை மருத்துவ மாணவி 2012–ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு கும்பலால் கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில், இளங்குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.சிறார் நீதி சட்டத்தின்படி, எத்தகைய கொடிய குற்றம் செய்தாலும் இளங்குற்றவாளிக்கு அதிகபட்சமாக 3 ஆண்டு மட்டுமே சிறைத்தண்டனை விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது.நிர்பயா வழக்கை தொடர்ந்து, கற்பழிப்பு, கடத்தல், கொள்ளை, கொலை உள்ளிட்ட கொடிய குற்றங்களில் ஈடுபடுகிற இளங்குற்றவாளிகளையும், பிற குற்றவாளிகள் போன்று விசாரணை நடத்தி கடுமையாக தண்டிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டுவர வேண்டும் என்று பலத்த குரல் எழுந்தது.
00delhi dec 23
அதைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் புதிய சிறார் (குழந்தைகள் பராமரிப்பு, பாதுகாப்பு) சட்ட மசோதா கொண்டு வந்து, கடந்த மே மாதம் 7–ந் தேதி நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்த மசோதா வை நிறைவேற்ற முடியாதபடிக்கு, மேல்–சபை பல்வேறு பிரச்சினைகளால் முடங்கியது. இதற்கிடை யே நிர்பயா வழக்கில் இளங்குற்றவாளியின் தண்டனை முடிந்து, கடந்த 20–ந் தேதி விடுதலையான நிலையில், மேல்–சபையில் சிறார் (குழந்தைகள் பராமரிப்பு, பாதுகாப்பு) சட்ட மசோதா நேற்று விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விவாதத்தை நிர்பயாவின் பெற்றோர், பார்வையாளர் மாடத்தில் இருந்து பார்த்தனர்.

மசோதாவை பெண்கள், குழந்தைகள் நலத்துறை ரி மேனகா காந்தி அறிமுகம் செய்து பேசினார். அப்போது அவர், ‘‘இளங்குற்றவாளிகளின் உரிமைகளை பாதுகாக்க சட்டத்தில் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. 16 வயதான நிலையில் ஒருவர் குற்றம் செய்தாலே சிறைக்கு அனுப்பி விட மாட்டோம். மன நல மருத்துவ நிபுணர்கள், மருத்துவர்கள், பிற துறை வல்லுனர்கள், நடந்த குற்றம் சிறுபிள்ளைத் தனமானதா, குற்றம் செய்யும் மனப்பாங்குடன் செய்யப்பட்டதா என ஆராய்ந்து தான் முடிவு எடுக்கப் படும்’’ என கூறினார்.

விவாதத்தை எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் தொடங்கி வைத்து பேசினார். அவர், ‘‘நாடு பல்வேறு துறைகளில் முன்னேறியுள்ள நிலையில், நிர்பயா கற்பழிப்பு வழக்கு போன்று சம்பவங்களும் நடந்துகொண்டிருப்பது வெட்கக்கேடானது’’ என கூறினார். மேலும், ‘‘சிறையில் இளங் குற்றவாளி களுக்கு தனி பிரிவு அமைக்க வேண்டும். மோசமான குற்றவாளிகளுடன் அவர்களை அடைத்து விட முடியாது’’ என குறிப்பிட்டார்.

தொடர்ந்து ரவிபிரகாஷ் வர்மா (சமாஜ்வாடி), தீரக் ஓ பிரையன் (திரிணாமுல் காங்.), அனு அகா (நியமன எம்.பி.), காஹாகஷன் பெர்வீன் (ஐ.ஜனதாதளம்), சதீஷ் சந்திர மிஷ்ரா (பகுஜன் சமாஜ்), வந்தனா சவான் (தேசியவாத காங்.), கே.டி.எஸ். துளசி (நியமன எம்.பி.), எம்.வி. ராஜீவ் கவுடா (காங்கிரஸ்), அனில் மாதவ் தவே (பா.ஜனதா), கனிமொழி (தி.மு.க.), நவனீத கிருஷ்ணன் (அ.தி.மு.க.) உள்பட பல கட்சி உறுப்பினர்களும் பேசினர்.இந்த மசோதாவுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, தேசியவாத காங்., அ.தி.மு.க., தி.மு.க., உறுப்பினர்கள் பேசினர்.

விவாதத்துக்கு மேனகா காந்தி பதில் அளித்து பேசினார். ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வெளிநடப்பு செய்தது. முடிவில் மசோதா, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறை வேறியது.இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் வழங்கி கையெழுத்திட்ட பின்னர், சட்டமாகி விடும். அதைத் தொடர்ந்து கொடிய குற்றங்களில் ஈடுபடுகிற இளங்குற்றவாளி களுக்கான வயது வரம்பு 16 ஆக குறைந்து விடும். 16–18 வயதினரும், வயது வந்த குற்றவாளிகள் போன்று, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு குறைந்தபட்சம் 7 ஆண்டு தண்டனை விதிக்கப்படும்.

Related Posts

error: Content is protected !!