கூகுளின் இன்பாக்ஸ் வசதி பெற்று விட்டீர்களா?

கூகுளின் இன்பாக்ஸ் வசதி பெற்று விட்டீர்களா?

இன்பாக்ஸ் என்னும் புது வசதியை கூகுள் இரண்டு மாதத்திற்க்கு முன் டெவலப்பர்கள் மற்றும் கூகுள் பார்ட்னர்களுக்கு அழைப்பிதழ் பெயரில் வழங்கி வந்தது. இப்போது பொது மக்களுக்கும் இந்த வசதியை இலவசமாக பெற கூகுளை நாடலாம். ஆனால் அவர்கள் உங்கள் கோரிக்கை நிறைவேற்றி பின்பு அழைப்பதிழை தர சிலருக்கு வாரம் / சிலருக்கு மாதம் என நேரம் ஆகலாம்.
ravi - nov 7
கூகுள் இன்பாக்ஸ் தான் என் ஈமெயிலில் இருக்கே இது என்ன என கேட்பவர்களுக்கு மட்டும்……. அதாவது இந்த இன்பாக்ஸ் உங்கள் ஜிமெயிலின் ஒரு அங்கமல்ல – இது ஒரு புது கண்டுபிடிப்பு………..இது இரண்டு வகைப்படும் – ஒன்று – ஆப்ஸ் முறையில் வேலை செய்யும் மற்றொன்று பிரவுசர் வழியாய் ஈமெயில் போலவும் வேலை செய்யும். உங்களுக்கு ஒரு அல்லது பல கணக்குகள் ஜிமெயில் இருப்பின் அல்லது உங்கள் கம்பெனி மெயில் கூகுள் ஆப்ஸ் மூலம் இயங்குமானால் அனைத்து ஈமெயில் அக்கவுன்ட்களையும் ஒரே இடத்தில் இணைத்து ஒரே இன்பாக்ஸாக கொண்டு வர முடியும்.

அது மட்டுமல்ல உதாரணத்திர்க்கு – ஆன்லைனில் டிக்கட் புக் செய்திருந்தால் நீங்கள் தேவைப்படும் செர்ச் செய்தால் அனைத்து மெயிலும் காட்டும் அதில் ஒன்று ஒன்றாய் திறந்தூ உங்களுக்கு தேவையான மெயிலை எடுக்க அதிக நேரம் செலவழிக்கும் ஒரு கொடுமை இனிமேல் இல்லை – அதாவது அனைத்து டிக்கட் புக்கிங்கும் ஒரே மெயில் அல்லது ஒரே திரட்டில் காட்டும் அதுவும் ஸ்க்ரீன் ஷாட் ஐகானாய் – இதன் மூலம் உங்களுக்கு நேர மிச்சம் அது போக ரிமைன்டர் ஆப்ஷன் – ஸ்னூஸ் ஆப்ஷன் என பல ஆப்ஷன் கலக்குகிறது. அது மட்டுமல்ல இந்த இன்பாக்ஸ் ஆப்ஸ் இன்ஸ்டால் செய்தால் ஒவொரு மெயிலும் சப்ஜெக்ட்டுடன் எஸ் எம் எஸ் போல் ஃபோனில் டக்குனு வழக்கமான ஜிமெயில் இன்பாக்ஸுக்கு போகும் முன் வருகிறது. இன்னும் பல ஆப்ஸன் இன்னைக்கே அப்ளை பண்ணி கலக்குங்க.

உடனே இப்ப ஒரு கூட்டம் வரும் பாருங்க – இதை நான் பல மாசமா யூஸ் பண்ரேன்னு – என்னை போல ஸ்க்ரீன் ஷாட் போட்ட இன்பாக்ஸ் அக்கவுன்ட்டை தான் நம்புவேன் ஆமா சொல்லிபுட்டேன் !

Have you got INBOX Invite? – Amazing new product from Google

error: Content is protected !!