குழந்தைகளை கவர வரும் ”ஜம்போ 3D!” ஆல்பம்

குழந்தைகளை கவர வரும் ”ஜம்போ 3D!” ஆல்பம்

MSG மூவீஸ் சார்பில் G ஹரி மற்றும் ஜப்பானை சேர்ந்த ஓகிடா இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘ ஜம்போ 3D ‘.இயக்குனர்கள் ஹரி-ஹரிஷ் கூட்டணியில் உருவாகும் இந்த திரைப்படம் பெரும்பாலும் ஜப்பானில் படமாக்கப்பட்டுள்ளது .’ஆ’ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தில் கோகுல்நாத் மீண்டும் கதாநாயகன் வேடம் ஏற்கிறார். இவருடன் சுகன்யா , பேபி ஹம்சிகா , அஞ்சனா , லொள்ளுசபா ஜீவா , ஈரோடு மகேஷ், யோக் ஜப்பீ மற்றும் ‘கும்கி’ அஷ்வின் ஆகியோர் நடித்துள்ளனர் .இதில் ” ஜம்போ என்ற ஜம்புலிங்கம் ஆக வரும் கோகுல்நாத் Mime-slapstick எனும் நடிப்பு பாணியை கையாண்டு இருக்கிறார். படத்தில் பேபி ஹம்சிகா துடுக்கான குழந்தை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் , குழந்தைகளை கவரக்கூடியதாய் அமையும். 100க்கும் மேற்ப்பட்ட ஜப்பானியர்கள் நடித்துள்ள இப்படத்தை முழுக்க ஜப்பானில் 40 நாட்கள் படமாகபட்டுள்ளது.” என்கின்றனர் ஹரி-ஹரிஷ் இரட்டையர்கள்.

படத்தின் தயாரிப்பாளர் G ஹரி குறிப்பிடுகையில் , ” நல்ல குடும்பத்திரைபடமாக அமைந்துள்ள இப்படம் குழந்தைகளை கவரும் . இந்திய-ஜப்பானிய கலாச்சாரத்தை பறைசாற்றக்குடிய வகையில் படமாக்கபட்டுள்ளது. இக்குழுவினரின் கடின உழைப்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தும். ஜப்பானியர்கள் நடித்துள்ளதால் இப்படத்தை ஜப்பானிலும் வெளியிட திட்டமிட்டுள்ளோம் ” என்றார் .” இப்படம் முழுக்க முழுக்க ஜப்பானின் அழகுமிக்க நகரங்களில் படம்மாக்கப்பட்டுள்ளது . அது மட்டும் இல்லாமல் ஜப்பானிய கலாச்சாரத்தையும் இந்திய மக்கள் அறியும் வகையில் உள்ளது. நடிகர் ரஜினி நடித்த படங்களுக்கு பிறகு குறிப்பாக ‘முத்து’ படத்திற்கு பிறகு ஜம்போ 3D பேசப்படும்” என்று பெருமிதத்துடன் கூறினார் ஜப்பான் நாட்டை சேர்ந்த ஓகிடா, படத்தின் இணை தயாரிப்பாளர்.

error: Content is protected !!