குழந்தைகளின் செவித்திறனை பாதிக்கும் செயற்கை தாலாட்டு கருவி! – அமெரிக்க அதிர்ச்சி!!

குழந்தைகளின் செவித்திறனை பாதிக்கும் செயற்கை தாலாட்டு கருவி! – அமெரிக்க அதிர்ச்சி!!

ஐம்புலன்களில் எந்தப் புலன் வேலை செய்யவில்லை என்றாலும் வாழ்க்கை நடத்துவது கஷ்டம் தான். காது கேளாமை என்பது ஒரே ஒரு குறைபாடு அல்ல என்றாலும் சின்னஞ்சிறு குழந்தைகள் காது கேளாமையால் பாதிக்கப் பட்டால் அவர்களது பேசும் திறமையும், மொழி அறிவும் பாதிக்கப்படும்.குழந்தைகள் நாம் பேசுவதைக் கேட்டுக் கேட்டுத்தான் மொழி அறிவு பெறுகிறார்கள், பேசப் பழகுகிறார்கள் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்ததுதான்.வளர்ந்த நாடுகளில் இந்தக் காது கேளாமை ஒரு பிறவிக் கோளாறாக இருக்கிறது; 1000 குழந்தைகளில் 3 குழந்தைகளுக்குக் காது கேட்பதில்லை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அமெரிக்காவில் பிறந்த குழந்தைகளை காணச் செல்பவர்கள் செயற்கை தாலாட்டு கருவி களை பரிசளிப்பது வழக்கம். இதுபோன்று தாலாட்டு கருவிகளில் பலவகை ஒலிகள் பதிவு செய்யப்பட்டு விற்கப் படுகிறது. இந்த கையடக்க கருவியில் கடல் அலை ஓசை, விலங்குகளின் ஓசை, ஆங்கில மொழியில் அமைந்த தாலாட்டு பாடல்கள் ஆகியவற்றால் குழ்ந்தைகளின் செவித்திறன் பாதிப்படைகிறது என்று கண்டறிந்துள்ளார்கள்
BabyQuiltedPink_
அமெரிக்காவில் பிஞ்சு குழந்தைகள் நிம்மதியாக தூங்குவதற்காக இந்த கருவியை தொட்டிலில் அல்லது படுக்கையில் தலைக்கு அருகே வைத்து விடுகின்றனர். இதிலிருந்து எழும் ஓசையை கேட்டவாறே குழந்தைகள் தூங்கிப் பழகி விடுகின்றன. சிலர் நாள் முழுவதும் கூட குழந்தையின் அருகில் இக்கருவியை வைத்து இசைக்க செய்கின்றனர். இதனால் இந்த கருவி இல்லாமல் குழந்தைகளை தூங்க வைக்க முடியவில்லை என்று பெற்றோர் கூறுகின்றனர்.இந்நிலையில், இந்த கருவிகள் குறித்து டொரான்டோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் ஒரு ஆய்வு நடத்தினர். இந்த ஆராய்ச்சியில் 14 விதமான செயற்கை தாலாட்டு கருவிகளை ஆய்வு செய்தனர்.இவற்றில் இருந்து வெளியான சத்தம் 68.8 முதல் 92.9 டெசிபல் அளவுக்கு இருந்தது. 3 கருவிகளில் இருந்து வெளிவரும் சத்தம், பணியிடங்களில் பெரியவர்கள் கேட்கும் அளவான 85 டெசிபல்களுக்கு மேல் இருந்தது. இந்த கருவிகளை குழந்தைகளின் தலை மாட்டில் 30 செ.மீ தூரத்தில் வைக்கும்போது குழந்தைகளின் கேட்கும் திறன் குறையும் என்று ஆய்வு முடிவில் தெரியவந்தது. அதாவது இதுபோன்று தாலாட்டு கருவிகள் அருகில் வைக்கப்பட்டு பழக்கப்பட்ட குழந்தைகள், கைவிரல் சொடுக்கைக் கூட சரியாக கேட்க முடியாமல் இருந்தது, இந்த ஆய்வில் தெரியவந்தது.

இதுகுறித்து ஆராய்ச்சியாளர் பிளேக் பாப்சின் கூறுகையில், ‘‘செயற்கை தாலாட்டு கருவிகளை 30 முதல் 100 செ.மீ தூரத்தில் வைக்கும்போது, சராசரியாக 50 டெசிபல் அளவுக்கு சத்தம் கேட்கிறது. இதனால் குழந்தையின் செவித்திறனில் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால், இந்த கருவிகளை குழந்தையின் படுக்கை அல்லது தொட்டிலில் இருந்து குறிப்பிட்ட தூரத்தில் வைக்கவேண்டும். மேலும், இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படுவது குறித்து பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்’’ என்றார்.

error: Content is protected !!