குரங்கு அம்மைக்கு புதிய பெயர் =எம்.பாக்ஸ் – உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு!

குரங்கு அம்மைக்கு புதிய பெயர் =எம்.பாக்ஸ் – உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு!

குரங்கு அம்மை, விலங்குகளிலிருந்து மனிதனுக்கு பரவும் ஒரு வகை வைரஸ் தொற்று ஆகும். இது முதன் முதலில் காங்கோ நாட்டில் 1970 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் தொற்று உண்டாவது மிக அரிதான ஒன்று. தொடக்கத்தில் குரங்குகளிடையே பரவி வந்த இந்த நோய் தற்போது மனிதர்களிடையே அதிகமாக பரவத் தொடங்கியுள்ளது.

அதிலும் குறிப்பாக ஆப்பரிக்க நாடுகளில் அதிகமாக பரவும் நிலையில், குரங்கு அம்மை என்ற பெயர் கருப்பினத்தவர்களை இழிவுபடுத்தக் கூடும் என்பதால் உலகளாவிய மருத்துவ நிபுணர்களின் தொடர்ச்சியான ஆலோசனையை தொடர்ந்து பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

அதன்படி தற்போது குரங்கு அம்மை என்ற பெயரை உலக சுகாதார அமைப்பு எம்பாக்ஸ் என மாற்றியுள்ளது.மேலும், குரங்கு அம்மை என்ற பெயரின் பயன்பாடும் படிப்படியாக பழக்கத்தில் இருந்து குறைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது..

error: Content is protected !!