கிறிஸ்துமஸ் – தலைவர்கள் வாழ்த்துகள்

கிறிஸ்துமஸ் – தலைவர்கள் வாழ்த்துகள்

கிறிஸ்துமஸ் பண்டிகை நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பெத்லஹேமில் இயேசு பிறந்த வரலாற்றை குறிக்கும் கிறிஸ்துமஸ் திருவிழாவை முன்னிட்டு, வாடிகன் சிட்டியில் உள்ள புனித பேராலயத்தில் நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். இரண்டரை மணி நேரம் நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போப் பிரான்சிஸ் இருள் ஆவி நீங்க போராடும் கத்தோலிக்க விசுவாசிகள்.ஏமாற்றத்திற்கு எதிராக நமது இதயம் மூடப்பட்டது என்றும் சிரியா போர், கிறிஸ்துவர்களுக்கு எதிரான தாக்குதல், பிலிப்பைன்ஸ் புயல் பாதிப்பு ஆகியவற்றில் இருந்து மக்களை காப்பாற்றி சீர்திருத்தம் வாக்குறுதி கிடைக்க வேண்டும் என்றார்
christmas-wishes-2013 25
மேலும் தமிழக கவர்னர் ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.கவர்னர் ரோசய்யா: கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் கிறிஸ்தவ சகோதரர்களுக்கு என் இதயம் கனிந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இயேசு கிறிஸ்து போதித்த, சகோதரத்துவம், அன்பு, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை ஆகியவற்றை வளர்த்து வாழ்க்கையில் பல வெற்றிகளை பெற வாழ்த்துக்கள்.

முதல்வர் ஜெயலலிதா: மனித வாழ்க்கையில் நம்பிக்கை என்னும் சக்தியை பெற்று விட்டால், இந்த உலகில் முடியாதது எதுவும் இல்லை என்ற இயேசுபிரான் போதனைக்கு ஏற்ப ஒவ்வொரு மனிதரும் நம்பிக்கையுடன் செயல்பட்டால் அவர்கள் வாழ்வில் வெற்றி நிச்சயம். இயேசு பிரானின் போதனைகளை நாம் கடைப்பிடித்தால் விரும்பியதை இறைவனிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம்.

திமுக தலைவர் கருணாநிதி: அன்பையும், பொறுமையையும் போதித்த இயேசு பெருமான் பிறந்த டிசம்பர் 25ம் நாள் கிறிஸ்துமஸ் திருநாளாக ஆண்டுதோறும் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. இயேசு நாதரை எண்ணும் போதே, அவரது கோட்பாடுகளை பரப்ப வந்த அயல்நாட்டுக் குருமார்களால் தமிழும், தமிழகமும் பெற்ற பெருமையை யாரும் மறக்க முடியாது.

பி.எஸ்.ஞானதேசிகன் (காங்கிரஸ்): அனைவரிடையேயும், அன்பு, பாசம், கருணை, மகிழ்ச்சி பெருகிடவும் சாதி, மத, இன பிரிவுகள் மறைந்து நல்லிணக்கம் மேம்படவும் வாழ்ந்து உயர்வோம். அனைத்து கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளுக்கும் தமிழக காங்கிரஸ் சார்பில் எனது உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

விஜயகாந்த் (தேமுதிக): தமிழகத்தை பொறுத்தவரை மக்கள் மின்வெட்டு, விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த சூழ்நிலையில் கிறிஸ்துமசை கொண்டாடுவது ஏழை எளிய மக்களுக்கு கஷ்டம்தான் என்றாலும், மகிழ்ச்சியாக கொண்டாட வாழ்த்துக்கள்.

ராமதாஸ் (பாமக): போட்டி பொறாமைகள் அகலவும், ஏழைகள் மற்றும் நலிவடைந்த பிரிவினரின் துயரங்கள் அகலவும் உழைப்போம் என ஏசுபிரான் அவதரித்த இந்த நன்னாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்போம்.

வைகோ (மதிமுக): இயேசு பெருமானின் மனித நேய அமுத மொழிகள், தமிழ்நாட்டுக்கு இன்றியமையாத தேவை ஆகும். அன்பையும், கனிவையும் பரிமாறும் நேசர்களாகிய கிறிஸ்தவப் பெருமக்களுக்கு, மதிமுக சார்பில், மனமகிழ்ச்சியோடு கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.

திருமாவளவன் (வி.சி.): வெறுப்பை விதைத்து பகையை மூட்டி ஆதா யம் தேடும் தற்குறிகளை காலம் அம்பலப்படுத்தும் எனும் நம்பிக்கையோடு இயேசு பெருமான் காட்டிய வழியில் மனித நேயத்தை மேம்படுத்த உறுதியேற்போம்! என யாவருக்கும் விடுதலை சிறுத்தைகள் சார்பில் அறைகூவல் விடுப்பதோடு, அவர் பிறந்த இந்த நாளில் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.

error: Content is protected !!