கிரிமினல் போலீசாகும் கதையான ‘ தொப்பி ‘ !

கிரிமினல் போலீசாகும் கதையான ‘ தொப்பி ‘  !

தொப்பி என்பது தமிழகத்தில் பல இடங்களில் காவலர்களை குறிப்பிடும் சொல்லாகும் காவலர்களின் பலத்தையும் செல்வாக்கையும் பற்றி பெரிய அளவும் மதிக்கும் இளைஞர்கள் ‘ தொப்பி’ என்ற சொல்லில் அழைக்க படுவதை பெருமிதமாக நினைப்பதும் உண்டு. மதுரை சம்பவம் , வெளி வர இருக்கும் சிவப்பு எனக்கு பிடிக்கும் ஆகிய படங்களை இயக்கிய யூரேகா இந்த ‘ தொப்பி’ படத்தையும் இயக்கி உள்ளார்.குரங்கணி காட்டின் பசுமையான பிண்ணனியில் படமாக்க பட்டு உள்ள ‘ தொப்பி’ காவலனாக ஆக வேண்டும் என்ற வேட்கையுடன் உள்ள ஒரு இளைஞனை பற்றிய கதை.குற்ற பின்னணியை களமாகவும் , கலாச்சாரமாகவும் கொண்ட அந்த இளைஞன் தனது லட்சிய கனவை அடைய அந்த குற்ற பிண்ணனி தடையாக இருப்பது தான் ‘ தொப்பியின் மூல கதை கரு. வைரமுத்துவின் பாடல்கள் , மற்றும் ‘மைனா’ புகழ் எம். சுகுமாரின் ஒளிபதிவு படத்தின் தரத்துக்கு பலம் சேர்க்கும். ராயல் ஸ்க்ரீன்ஸ் என்னும் புதிய நிறுவனத்தின் சார்பில் எஸ். பரமராஜ் தயாரித்து உள்ள ‘ தொப்பி’ படத்தின் படப்பிடிப்பு முடிந்தது.இறுதி கட்ட பணிகள் நடந்து கொண்டு இருக்கும் ‘ தொப்பி’ ஜூன் மாதம் வெளி வரும் என கூற படுகிறது.

error: Content is protected !!