’காவியத் தலைவன்’ பற்றி வசந்தபாலன் பேட்டி + ஆல்பம்!

’காவியத் தலைவன்’  பற்றி வசந்தபாலன் பேட்டி + ஆல்பம்!

சித்தார்த்,வேதிகா, ப்ரித்விராஜ், நாசர் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காவியத் தலைவன்’. வசந்தபாலன் இயக்கியுள்ள இப்படம் தமிழக மேடை நாடக கலைஞர்களையும், அவர்களுடைய வாழ்க்கையையும் மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.நவம்பர் 14ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள இப்படத்தின் உலக பிரீமியர் காட்சி துபாய் நாட்டில், நவம்பர் 13ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய இயக்குனர் வசந்தபாலன்,”தமிழக நாடக உலகம் என்பது ரொம்ப சிறப்பு வாய்ந்தது. அது ஒரு பொற்காலமாக திகழ்ந்தது. அப்படிப்பட்ட நாடக உலகத்தைப் பற்றி எப்படியாவது சினிமாவில் சொல்ல வேண்டும் என்ற ஆசையால் இப்படத்தை இயக்கியிருக்கிறேன்.நாடக உலகில், மேதைகளாக திகழ்ந்த கிட்டப்பா – கே.பி.சுந்தரம்பாள் ஜோடியின் வாழ்க்கையை நான் படமாக்கவில்லை. என் படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்களுக்கு அவர்களுடைய சாயலை கொடுத்திருக்கிறேன். இந்த கதையை நாடக உலகம் சம்மந்த பட்ட படமாக மட்டும் இன்றி, ஒரு அலுவலகத்தை வைத்தோ, அல்லது தற்பொது சூழ்நிலையில் வேறு ஒரு கதைக்களத்தில் கூட எடுக்கலாம்.

ஆனால், நமது நாடக உலகத்தின் பெருமைகளை இளைய தலைமுறையினருக்கு சொல்ல வேண்டும் என்ற எனது தீராத ஆசையினால், நாடக உலகத்தை பின்புலமாக வைத்துக்கொண்டு இப்படத்தை சொல்லியிருக்கிறேன். எப்படி ஒரு காதல் கதையில், சென்னை தி நகர் ரங்கநாதன் தெருவைப் பற்றி சொன்னேனோ அதுபோல தான்.நாடக நடிகர்களான கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாள் ஆகியோருக்கு பெருமை சேர்க்கும் விதமாக இந்த படத்தை எடுத்திருக்கிறேன். சித்தார்த்-வேதிகாவின் கதாபாத்திரங்களில் அவர்களுடைய சாயல் இருந்தாலும், இந்த படம் அவர்களை பற்றிய கதை கிடையாது.

இப்படத்துக்காக தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்று ‘ரோடு ஷோ’ நடத்தி படத்தை விளம்பரப்படுத்தவுள்ளோம். அந்த காலத்தில் நாடகத்தை பார்க்க மக்களை வரவழைக்க எப்படி தெருத் தெருவாக சென்று தண்டோரா அடித்து அவர்களுக்கு தெரியப்படுத்தினார்களோ, அதையே நவீன முறையில் இப்படத்துக்காக செய்யவிருக்கிறோம்.” என்றார்.

error: Content is protected !!