காரில் குழந்தைகளை அழைத்து செல்லும்போது சிகரெட் பிடிக்க தடை – இங்கிலாந்து அரசு அதிரடி!

காரில் குழந்தைகளை அழைத்து செல்லும்போது சிகரெட் பிடிக்க தடை – இங்கிலாந்து அரசு அதிரடி!

இங்கிலாந்தில் சிகரெட் பிடிக்க நிபந்தனைகள் விதிக்க வேண்டும் என்று சுகாதார ஆர்வலர்களும், சுற்றுச்சூழல் ஆதரவாளர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும், முக்கியமான இடங்களில் சிகரெட் புகைக்க தடை விதிக்க வேண்டும் என எதிர்கட்சியினரும் கோரிக்கை எழுப்பி வருகின்றனர். இதையடுத்து இங்கிலாந்தில் காரில் குழந்தைகளை அழைத்து செல்லும்போது பெற்றோர் சிகரெட் பிடிக்க அரசு தடை விதித்துள்ளது.
health smoke with child
புகைப்பதனால் விளைகின்ற தீமைகளைப் பட்டியலிட்டால் அது முடிவில்லாது நீண்டு கொண்டே போகும். பல ஆண்டுகளுக்கு முன்னர் புகைப்பதனால் ஏற்படுகின்ற தீமைகள் என்ற உத்தேசமாகச் சொல்லப்பட்டு வந்தவை அனைத்தும் இன்றைக்குப் பல அறிவியல் ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டு விட்டன. இவ்வகை ஆய்வுகள் மேலும் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
இந்த வரிசையிலே புகையிலையுள்ள நிகோடின் (Nicotine) எனப்படும் நஞ்சினால் ஏற்படக்கூடிய குறைபாடுடைய கரு. கருச்சிதைவு போன்றவைகள் பற்றிய பல ஆய்வு முடிவுகள் வந்துள்ளன. அவற்றைத் தொடர்ந்து தற்போது புகைப்பழக்கம் இனக்கவர்ச்சி ( Sex attraction) யை அழிப்பதுடன் ஆண் பெண் உடலுறவைப் பெரிதும் பாதிக்கின்றது எனப்பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.மேலும் ஒரு ஆய்வில், இத்தகைய சிகரெட்டு அறிவுத்திறனை பாதிப்பதையும், நினைவை மழுங்கடிப்பதையும் கண்டறிந்துள்ளனர். இதையடுத்து குறிப்பாக இளந்தலைமுறையினர் சிகரெட், மதுபானம் உள்ளிட்ட போதை பழக்கங்களுக்கு அடிமையாகாத வண்ணம், சிகரெட் உள்ளிட்ட பழக்கங்களை பொது இடத்தில் மேற்கொள்ள கட்டுபாடுகள் விதிக்க வேண்டும் என்பது இவர்களின் கோரிக்கை. இதனையடுத்து முதல்கட்டமாக இங்கிலாந்து அரசு சிகரெட் புகைக்க கட்டுபாடுகளை விதித்துள்ளது.

இதில் பெற்றோர் தங்களது குழந்தைகளை அழைத்து செல்லும்போது காருக்குள் புகைக்க கூடாது என தடை விதித்துள்ளது. அடுத்த ஆண்டு மே மாதம் அங்கு பொது தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக இந்த சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதில் இங்கிலாந்து அரசு தீவிரமாக உள்ளது. இந்நிலையில், இது தனிமனித சுதந்திரத்தில் அரசு தலையிடுவதாக உள்ளது என சில எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். புகைப்பதற்கு போதிய இடவசதி இல்லாத கார்களில் செல்லும்போது குழந்தைகளை வைத்துக் கொண்டு சிகரெட் பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை என ஒரு சில சிகரெட் தயாரிப்பு நிறுவனங்களே இதற்கு ஆதரவும் தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Banned! Smoking in cars carrying children to be a criminal offence
**********************************************************************************
Smoking in a car carrying children will become a criminal offence after MPs last night backed a ban in the Commons by a large majority.In an historic vote, Tory and Lib Dem MPs backed plans to make it illegal to light up in a car in England, punishable by a £60 fine or points on a motorist’s licence.It came after Prime Minister David Cameron the ’time has come’ for a ban, brushing aside claims from his Lib Dem deputy Nick Clegg who branded the ban illiberal and unenforceable.

error: Content is protected !!