காய்கறி விலை இனிமே கொஞ்சம் கொஞ்சமா அஞ்ச வைக்கும்!

காய்கறி விலை இனிமே கொஞ்சம் கொஞ்சமா அஞ்ச வைக்கும்!

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த வாரத்தில் காய்கறிகள் விலை குறைந்து காணப்பட்டது. கடந்த மாதத்தில் விலை உச்சத்தில் காணப்பட்ட பீன்ஸ், அவரைக்காய், முருங்கைக்காய் ஆகியவை கடந்த வாரத்தில் விலை குறைந்து காணப்பட்டது. மற்ற காய்கறிகளின் விலையும் குறைந்தது. கடந்த மாதத்தில் ஒரு கிலோ ரூ.25 முதல் 30 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த பல்லாரி வெங்காயம், கடந்த வாரத்தில் கிலோவுக்கு ரூ.15 அதிகரித்து, ஒரு கிலோ ரூ.45–க்கு விற்பனை செய்யப்பட்டது.
vegtitable
நேற்று காய்கறிகள் விலை சற்று உயர்ந்துள்ளது என்றும், தக்காளி, பல்லாரி ஆகியவற்றின் விலை கிலோவுக்கு ரூ.5 அதிகரித்துள்ளது என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து கோயம்பேடு வியாபாரிகள் சங்க ஆலோசகர் சவுந்தரராஜன், “கடந்த வாரத்தில் காய்கறிகள் விலை குறைந்து காணப்பட்டது. தக்காளி விலையும் வீழ்ச்சி அடைந்திருந்தது. ஆனால் நேற்று முகூர்த்த நாளையொட்டி காய்கறிகள் விலை 5 சதவீதம் வரை உயர்ந்து காணப்பட்டது.தக்காளி விலை கடந்த வாரத்தில் ஒரு கிலோ ரூ.7, ரூ.8–க்கு விற்பனை செய்யப்பட்டது. 70 லாரிகளில் வந்து கொண்டு இருந்த தக்காளி, தற்போது 55 லாரிகளில் வருவதால், தக்காளி விலை கிலோவுக்கு ரூ.5 வரை அதிகரித்துள்ளது.

அதேபோல், மராட்டிய பல்லாரி வெங்காயம் கடந்த வார விலையை விட நேற்று கிலோவுக்கு ரூ.5–ம், முருங்கைக்காய் விலை கடந்த வாரத்தை காட்டிலும் கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.10 வரையும் அதிகரித்துள்ளது. இனி வரக்கூடிய நாட்களிலும் காய்கறிகள் விலை படிப்படியாக அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று விற்பனை செய்யப்பட்ட காய்கறிகள் விலை நிலவரம் (ஒரு கிலோ) இதுதான் :

உருளைக்கிழங்கு – ரூ.15, மராட்டிய பல்லாரி வெங்காயம் – ரூ.50, ஆந்திரா பல்லாரி வெங்காயம் – ரூ.30, பீன்ஸ் – ரூ.25, கேரட் – ரூ.30, நூக்கல் – ரூ.25, சவ்சவ் – ரூ.25, முட்டைக்கோஸ் – ரூ.15, மிளகாய் – ரூ.20, சேப்பக்கிழங்கு – ரூ.30, சேனைக்கிழங்கு – ரூ.25, கத்தரிக்காய் – ரூ.8 முதல் ரூ.15 வரை, வெண்டைக்காய் – ரூ.15, அவரைக்காய் – ரூ.20 முதல் ரூ.25 வரை, கோவைக்காய் – ரூ.15, கொத்தவரங்காய் – ரூ.20, பாகற்காய் – ரூ.25, முருங்கைக்காய் – ரூ.35, பச்சைப்பட்டாணி – ரூ.170, தக்காளி – ரூ.10 முதல் ரூ.12 வரை, சாம்பார் வெங்காயம் – ரூ.35, காலிபிளவர் – ரூ.25 முதல் ரூ.30 வரை, புடலங்காய் – ரூ.20, சுரைக்காய் – ரூ.15, பீர்க்கங்காய் – ரூ.25, தேங்காய் – ரூ.20, வாழைக்காய் (காய் ஒன்று) – ரூ.5. இவ்வாறு அவர் கூறினார்.

error: Content is protected !!